Page Loader
புதிய விதியை ட்விட்டரில் அறிவித்த எலான் மஸ்க்!
ட்விட்டரில் புதிய அப்டேட்டை வெளியிடும் எலான் மஸ்க்

புதிய விதியை ட்விட்டரில் அறிவித்த எலான் மஸ்க்!

எழுதியவர் Siranjeevi
Mar 28, 2023
09:35 pm

செய்தி முன்னோட்டம்

ட்விட்டர் நிறுவனத்தில் பல அப்டேட்களை வழங்கி வரும் நிலையில், அதன் நிறுவனர் எலான் மஸ்க் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் Verified அக்கவுண்ட்கள் மட்டுமே For You பிரிவில் பரிந்துரை செய்யப்படும் என அறிவித்து இருக்கிறார். எனவே, இதன் மூலம் AI பாட்கள் தளத்தில் ஆதிக்கம் செலுத்துவதை தடுக்க முடியும் எனவும் தெரிவித்து இருக்கிறார். இதுமட்டுமின்றி வாக்கு எடுப்புகளில் கலந்துகொள்ளவும் verification பெற வேண்டும் எனவும் மஸ்க் ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக ட்விட்டர் நிறுவனத்தின் அறிவிப்பில் வெளியான தகவலின்படி, ஏப்ரல் 1 முதல் பழைய வெரிஃபடு அக்கவுண்ட்களை நிறுத்தப்போவதாக அறிவித்து இருந்தனர். உலகம் முழுவதுமே புளூ டிக் பயன்பாடு கிடைக்க ஆரம்பித்துள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

ட்விட்டரில் புதிய விதியை கொண்டுவரும் எலான் மஸ்க்