ட்விட்டர் நிறுவனத்தின் ஆதாரக் குறியீடு கசிவு! பின்னணியில் யார்?
ட்விட்டரின் மூலக் குறியீட்டின் சில பகுதிகள் இணையத்தில் கசிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் பின்னணியில் ஒரு முன்னாள் ஊழியர் இருப்பதாக நிறுவனம் சந்தேகித்துள்ளது. கசிந்த தகவல், மைக்ரோ பிளாக்கிங் தளத்தை இயக்க தேவையான அடிப்படை குறியீடுகள் எனக்கூறப்படுகிறது. பிரபல சமூக ஊடகம் இதை சட்டப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சட்ட ஆவணத்தின்படி, GitHub இல் பற்றி வெளியான குறியீட்டை விரைவில் அகற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், கசிவு செய்தவரின் அடையாளத்தை வெளியிட வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த நாட்களுக்கு முன் மஸ்க் ட்விட்டரில், எங்கள் அல்காரிதம் மிகவும் சிக்கலானது, சிக்கல்கள் கண்டறியப்பட்டல் உடனடியாக தீர்ப்போம் எனக்கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.