Loading...
வாட்ஸ்அப் செயலியிலேயே சர்வதேச பயண eSIM வசதி: ரோமிங் கட்டணத்தை சேமிப்பது எப்படி?
வாட்ஸ்அப் செயலியிலேயே சர்வதேச பயண eSIM வசதி விரைவில் அறிமுகம்

வாட்ஸ்அப் செயலியிலேயே சர்வதேச பயண eSIM வசதி: ரோமிங் கட்டணத்தை சேமிப்பது எப்படி?

எழுதியவர் Sekar Chinnappan
Nov 27, 2026
03:22 pm

செய்தி முன்னோட்டம்

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலி சர்வதேச பயணிகள் வெளிநாடுகளுக்கு செல்லும்போது தடையின்றி இணையத் தொடர்பில் இருக்க உதவும் வகையில் செயலியிலேயே இ-சிம் (eSIM) சேவையை அறிமுகப்படுத்த உள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது. இந்த புதிய அம்சத்தின் மூலம் பயனர்கள் வேறொரு செயலிக்கு செல்லாமல் வாட்ஸ்அப் உள்ளேயே சர்வதேச பயணத்திற்கான மொபைல் டேட்டா திட்டங்களை வாங்கி இன்ஸ்டால் செய்ய முடியும். இதன் மூலம் வெளிநாடுகளுக்கு சென்றதும் அதிகப்படியான சர்வதேச ரோமிங் கட்டணங்களை செலுத்துவதையும் உள்ளூர் சிம் கார்டுகளைத் தேடி அலைவதையும் பயனர்கள் எளிதாகத் தவிர்க்கலாம்.

குணால் ஷாவின் பதிவு

பழைய மொபைல் எண்ணிலேயே வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தும் வசதி

பயணத்தின் போது போர்டிங் பாஸ் பெறுவது முதல் குடும்பத்தினருக்கு பாதுகாப்பாக சென்றடைந்த தகவலைத் தெரிவிப்பது வரை உலகெங்கிலும் உள்ள மக்கள் வாட்ஸ்அப்பையே நம்பியுள்ளனர் என நிறுவனம் தனது வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளது.

ஒரு செய்தியை அனுப்புவது போல மிக எளிமையாக ஒரு சில டேப்களில் டேட்டா இ-சிம்மை இன்ஸ்டால் செய்வதன் மூலம் பயனர்கள் தங்களது பழைய தொலைபேசி எண்ணிலேயே வாட்ஸ்அப்பைத் தொடர்ந்து பயன்படுத்த முடியும்.

இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள வாட்ஸ்அப் தலைவர் குணால் ஷா உலகில் எங்கு சென்றாலும் எந்த சிரமமும் இன்றி வாட்ஸ்அப் செயல்படும் வகையில் இ-சிம் குறித்த ஆரம்பகட்டப் பணிகளைத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ, வெரிசோன் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களுடன் வாட்ஸ்அப் கூட்டணி

இந்த சர்வதேச பயண இ-சிம் சேவையை உலகளவில் கொண்டு வருவதற்காக பல்வேறு இ-சிம் வழங்குநர்கள் மற்றும் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் வாட்ஸ்அப் கூட்டணி அமைத்துள்ளது.

அதன்படி இந்தியாவின் ரிலையன்ஸ் ஜியோ அமெரிக்காவின் வெரிசோன் தென்கிழக்கு ஆசியாவின் ஸ்மார்ட் ஆக்சியாட்டா மற்றும் பிலிப்பைன்ஸின் ஸ்மார்ட் கம்யூனிகேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இதில் இணைந்துள்ளன.

எதிர்காலத்தில் இந்த சேவையை விரிவுபடுத்தும்போது மேலும் பல தொலைத்தொடர்பு கூட்டாளிகள் இணைவார்கள் எனவும் வாட்ஸ்அப் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

வெளியீட்டுத் திட்டம்

வெளியீட்டுத் திட்டம் மற்றும் பயனர்கள் எதிர்பார்க்க வேண்டிய விவரங்கள்

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரு தளங்களிலும் பயன்பாட்டிற்கு வரவுள்ள இந்த இ-சிம் சேவை விரைவில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இருப்பினும் முதற்கட்டமாக எந்தெந்த நாடுகளில் இந்தச் சேவை தொடங்கும் என்பது குறித்தும் டேட்டா திட்டங்களின் விலை மற்றும் கால அளவு குறித்தும் வாட்ஸ்அப் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

ரிலையன்ஸ் ஜியோ இதில் முக்கியக் கூட்டாளியாக இடம்பெற்றுள்ளதால் இந்திய பயணிகளுக்கும் இந்த வசதி விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT