ஓசோன் மண்டலத்தை அழிக்கும் திறன் வாய்ந்த நியூட்ரான் நட்சத்திர மோதல்
செய்தி முன்னோட்டம்
விண்வெளியில் நியூட்ரான் நட்சத்திரங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அளவில் சிறிய ஆனால் மிக மிக அடர்த்தியானவை நியூட்ரான் நட்சத்திரங்கள். நமது சூரியனை விட பலமடங்கு பெரிய நட்சத்திரங்கள் தன்னுடைய அந்திம காலத்தில் உள்ளீர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு கருந்துளையாக மாறும்.
ஆனால், அளவில் சிறிய நட்சத்திரங்கள் தன்னுடைய அந்தம காலத்தில் உள்ளீர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டால் அது நியூட்ரான் நட்சத்திரங்களாக உருவெடுக்கும். தன்னுடைய நிரையை உள்ளிளுத்துக் கொள்வதால் இதன் அளவு சிறியதாகவும், அடர்த்தி அதிகமாகவும் இருக்கும்.
இவ்வாறான இரு நியூட்ரான் நட்சத்திரங்கள் ஒன்றோரு ஒன்று மோதினால் என்னவாகும்? அந்த மோதலில் இருந்து வெளியாகும் காமா மற்றும் காஸ்மிக் கதிர்கள் சுற்றியிருக்கக்கூடிய அணுக்களில் இருந்து எலெக்ட்ரான்களைப் பிரித்தெடுத்து அயனியாக்கத்தை மேற்கொள்ளும். அதனால் பூமியில் இருக்கும் உயிர்களுக்கும் ஆபத்து ஏற்படலாம்.
விண்வெளி
முதல் நியூட்ரான் நட்சத்திர மோதல்:
நியூட்ரான் நட்சத்திர மோதல் என்பது மிக மிக அரிதாக நடக்கும் விண்வெளி நிகழ்வுகள் ஒன்று. இதுவரை ஒரே ஒரு முறை மட்டுமே அப்படியான ஒரு நிகழ்வு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
2017ம் ஆண்டு GW 170817 எனப் பெயரிடப்பட்ட காந்த அலைகள் மற்றும் GRB 170817A எனப் பெயரிடப்பட்ட காமா கதிக் வெடிப்புகளை பதிவு செய்தன அமெரிக்காவில் உள்ள LIGO விண்வெளி கண்காணிப்பகம்.
பூமியிலிருந்து 130 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் இரு நியூட்ரான் நட்சத்திரங்கள் மோதிக்கொண்டதால் உருவானவை இவை என்பது பின்னர் கண்டறியப்பட்டது.
130 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் நடைபெற்ற நிகழ்வின் தாக்கத்தை பூமியில் உணர முடிந்தால், அந்த நிகழ்வு பூமிக்கு அருகில் நிகழ்ந்திருந்தால்?
பூமி
பூமிக்கு அருகில் நியூட்ரான் நட்சத்திர மோதல் நிகழ்வு:
பூமிக்கு அருகில் சுமார் 36 ஒளியாண்டுகள் தொலைவில் இரு நியூட்ரான் நட்சத்திரங்கள் மோதுகின்றன என்று வைத்துக் கொள்வோம் (பூமிக்கு அருகே அப்படியான நிகழ்வுகள் நடைபெறும் சாத்தியக்கூறுகள் மிக மிகக் குறைவு. இது ஒரு சிந்தனைப் பரிசோதனை மட்டுமே).
பூமிக்கு அருகில் நியூட்ரான் நட்சத்திர மோதல் நடைபெற்றால், அதன் தாக்கத்திலிருந்து வெளிவரும் காமா கதிர்கள் மற்றும் காஸ்மிக் கதிர்களானது பூமியின் பாதுகாப்பு வளையமான ஓசோன் படலத்தை முற்றிலுமாக அளித்து விடும்.
சூரியனிலிருந்து வெளிவரும் புறஊதாக் கதிர்கள் மற்றும் விண்வெளியிலிருக்கும் பல்வேறு வகையான கதிர்களிடமிருந்து பூமியில் வாழும் உயிர்களை பாதுகாப்பது ஓசோன் மண்டலம் தான்.
ஓசோன் மண்டலம் அழிக்கப்பட்டால், அடுத்த ஆயிரம் வருடங்களுக்கு பூமியில் உயிர்கள் பிழைத்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகமிகக் குறைவு.