இந்தியாவில் வெளியானது புதிய விவோ V29 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்
நீண்ட நாள் காத்திருப்புக்குப் பின்பு இந்தியாவில் புதிய 'V29' சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டிருக்கிறது விவோ. இந்தப் புதிய சீரிஸின் கீழ் 'விவோ V29' மற்றும் 'விவோ V29 ப்ரோ' என இரண்டு ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. இரண்டு ஸ்மார்ட்போன்களிலுமே 6.78இன்ச் AMOLED திரையைக் கொடுத்திருக்கிறது விவோ. இத்துடன் இரண்டு ஸ்மார்ட்போன்களிலும், ட்ரிபிள் கேமரா செட்டப், 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய 4,600mAh பேட்டரி ஆகிய வசதிகளைக் கொடுத்திருக்கிறது. V29 மாடலில் 50MP முதன்மைக் கேமரா, 8MP அல்ட்ரா-வைடு லென்ஸ் மற்றும் 2MP பொக்கே லென்ஸ் அடங்கிய ட்ரிபிள் கேமரா செட்டப் அளிக்கப்பட்டிருக்கிறது. V29 ப்ரோ மாடலில், 50MP முதன்மைக் கேமரா, 12MP போர்ட்ரெய்ட் மற்றும் 8MP அல்ட்ரை-வைடு லென்ஸ் அடங்கிய செட்டப் கொடுக்கப்பட்டிருக்கிறது.
விவோ V29 சீரிஸ்: ப்ராசஸர் மற்றும் விலை
V29 மாடலில் ஸ்னாப்டிராகன் 778G ப்ராசஸரையும், V29 ப்ரோவில் டைமன்சிட்டி 8200 ப்ராசஸரையும் கொடுத்திருக்கிறது விவோ. இரண்டு மாடல்களிலும் முன்பக்கம் 50MP செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டிருக்கிறது. V29 மாடலானது, 8GB+128GB மற்றும் 12GB+128GB கான்பிகரேஷன்களில் வெளியாகியிருக்கிறது. இவற்றில் 8GB வேரியன்டானது ரூ.32,999 விலையிலும், 12GB வேரியன்டானது ரூ.36,999 விலையிலும் வெளியிடப்பட்டிருக்கிறது. அதேபோல், V29 ப்ரோ மாடலானது 8GB+256GB மற்றும் 12GB+256GB கான்பிகரேஷன்களில் வெளியாகியிருக்கிறது. இவற்றில் 8GB வேரியன்டானது ரூ.39,999 விலையிலும், 12GB வேரியன்டானது ரூ.42,999 விலையிலும் வெளியிடப்பட்டிருக்கிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களின் முன்பதிவும் இன்று முதல் தொடங்கும் நிலையில், V29 ப்ரோ மாடலின் விற்பனை அக்டோபர் 10 முதலும், V29 மாடலின் விற்பனை அக்டோபர் 17 முதலும் ப்ளிப்கார்ட் மற்றும் விவோ இணையப்பக்கங்களில் தொடங்குகிறது.