NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / சீனாவில் புதிய X100 5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தும் விவோ, இந்தியாவில் எப்போது?
    அடுத்த செய்திக் கட்டுரை
    சீனாவில் புதிய X100 5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தும் விவோ, இந்தியாவில் எப்போது?
    சீனாவில் புதிய X100 5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தும் விவோ

    சீனாவில் புதிய X100 5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தும் விவோ, இந்தியாவில் எப்போது?

    எழுதியவர் Prasanna Venkatesh
    Nov 05, 2023
    04:30 pm

    செய்தி முன்னோட்டம்

    சீனாவில் இந்த மாதம் 13ம் தேதியன்று புதிய X100 5G ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தவிருக்கிறது விவோ. சீனாவைத் தொடர்ந்து இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்த ஸ்மார்ட்போனை இந்தியாவில் அந்நிறுவனம் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தப் புதிய விவோ ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் கசிந்திருக்கின்றன. 120Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட 6.78-இன்ச் டிஸ்பிளே மற்றும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் உள்ளிட்ட வசதிகளைக் கொண்டு வெளியாகவிருக்கிறது விவோ X100 5G.

    பின்பக்கம் 50MP முதன்மைக் கேமரா, 50MP அல்ட்ரா-வைடு கேமரா மற்றும் 64MP டெலிபோட்டோ லென்ஸ் என ட்ரிபிள் கேமரா செட்டப்பும், முன்பக்கம் 32MP செல்ஃபி கேமராவும் இந்த X100 5G-யில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

    விவோ

    விவோ X100 5G: ப்ராசஸர் மற்றும் பிற வசதிகள் 

    புதிய X100 5G ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 9300 ப்ராசஸரையும், ஆண்ட்ராய்டு 14ஐ அடிப்படையாகக் கொண்ட ஆரிஜின் ஓஎஸ் இயங்குதளத்தையும் விவோ கொடுத்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

    16GB வரையிலான ரேமும், 1TB வரையிலான UFS 4.0 ஸ்டோரேஜ் வசதியும் புதிய X100 5G-யில் கொடுத்திருக்கிறது விவோ. மேலும், 120W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 5,000mAh பேட்டரியும் கொடுக்கப்படவிருக்கிறது.

    சீனாவில் இந்த விவோ X100 5G ஸ்மார்ட்போனானது இந்திய மதிப்பிற்கு ரூ.45,000 விலையில் வெளியிடப்படவிருப்பதாகக் கூறப்படும் நிலையில், இந்தியாவில் ரூ.50,000-க்கும் மேலான விலையிலேயே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மாடல்களில் உள்நாட்டுத் தயாரிப்பான NavIC வசதியுடன் X100 5G ஸ்மார்ட்போனை விவோ விற்பனை செய்யவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விவோ
    ஸ்மார்ட்போன்
    சீனா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    விவோ

    இந்தியாவில் வெளியானது விவோவின் புதிய Y36 ஸ்மார்ட்போன் கேட்ஜட்ஸ்
    ரூ.9,000 கோடி வரை வரி ஏய்ப்பு செய்த சீன மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் சீனா
    இந்தியாவில் வெளியானது புதிய 'விவோ T2 ப்ரோ 5G' ஸ்மார்ட்போன் ஸ்மார்ட்போன்
    இந்தியாவில் வெளியானது புதிய விவோ V29 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் கேட்ஜட்ஸ்

    ஸ்மார்ட்போன்

    இந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகவிருக்கும் புதிய ஸ்மார்ட்போன்கள் கேட்ஜட்ஸ்
    இந்தியாவில் வெளியானது ரெட்மி 12 4G மற்றும் 5G ஸ்மார்ட்போன்கள் ரெட்மி
    இந்தியாவில் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனான 'யுவா 2'வை வெளியிட்டிருக்கிறது லாவா லாவா
    எப்போது அறிமுகமாகிறது ஆப்பிள் ஐபோன் 15 சீரிஸ்? என்னென்ன வசதிகள்? ஆப்பிள்

    சீனா

    ஆசிய விளையாட்டுப் போட்டியில் அருணாச்சல பிரதேச வீரர்களுக்கு அனுமதி மறுத்த சீனா ஆசிய விளையாட்டுப் போட்டி
    சீனாவால் அனுமதி மறுப்பு; யார் இந்த நைமன் வாங்சு, ஒனிலு தேகா மற்றும் மெபுங் லாம்கு? ஆசிய விளையாட்டுப் போட்டி
    இந்தோ சீன கலவை உணவான சோயா மஞ்சூரியன் செய்வது எப்படி? சமையல் குறிப்பு
    சீனாவிற்கு எதிராக விளையாட்டு வீரர்கள் விவகாரத்தில் வலுவான எதிர்ப்பை பதிவு செய்திருக்கும் இந்தியா இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025