தங்கம் விலை சவரனுக்கு ரூ,720 சரிவு - இன்றைய விலை விபரம்!
தங்கம் விலையானது அடிக்கடி சரிவு மற்றும் ஏற்றத்தை கண்டு வருகிறது. ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர் காரணமாக, கடந்த ஆண்டு பல நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. இதனால் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம், வெள்ளி விலை, கடந்த சில நாட்களுக்கு மிகவும் குறைந்த விலைக்கு சரிந்தது. அதன் பின்னர் பட்ஜெட் தாக்கலுக்கு பின் மள மளவென தங்கம் விலை உயரத்தொடங்கியது. இந்நிலையில், தங்கம் விலை தொடர்ந்து 6 நாட்களில், சவரனுக்கு ரூ.720 குறைந்து உள்ளது. மீண்டும் இன்று பிப்ரவரி 17 இல் சவரனுக்கு 240 ரூபாயும் விலை குறைந்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளியின் சரிவு - விலை விபரங்கள் இங்கே
சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று(பிப்.17) சவரனுக்கு ரூ.240 குறைந்து, ரூ.42,000 விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 30 குறைந்து 5,250க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை ஒரு கிராம் வெள்ளி விலை மாற்றம் இல்லை . ஒரு கிராம் வெள்ளி ரூ.71.80 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் ஒரு கிலோ விலை ரூ.71,800க்கு விற்பனையாகிறது. எப்பொழுதும் தொடர்ந்து ஏறி வரும் தங்கம் விலை கடந்த சில நாட்களில் மட்டுமே ரூ.720 ரூபாய் குறைந்துள்ளது இல்லத்தரசிகளுக்கு ஆறுதல் அளித்துள்ளது.