Page Loader
மளமளவென சரிந்த தங்கம் விலை! வாங்க சரியான நேரம்
தங்கம் விலையானது இன்று பிப்ரவரி 16 இல் சற்று சரிந்துள்ளது

மளமளவென சரிந்த தங்கம் விலை! வாங்க சரியான நேரம்

எழுதியவர் Siranjeevi
Feb 16, 2023
12:56 pm

செய்தி முன்னோட்டம்

தங்கம் விலையானது அடிக்கடி சரிவு மற்றும் ஏற்றத்தை கண்டு வருகிறது. ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர் காரணமாக, கடந்த ஆண்டு பல நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. இதனால் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம், வெள்ளி விலை, கடந்த சில நாட்களுக்கு மிகவும் குறைந்த விலைக்கு சரிந்தது. அதன் பின்னர் பட்ஜெட் தாக்கலுக்கு பின் மள மளவென தங்கம் விலை உயரத்தொடங்கியது. இந்நிலையில், கடந்த 5 நாட்களாகவே சற்று சரிந்த தங்கம் விலை இன்று(பிப்16) தங்கம் விலை அதிரடியாக சரிந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின், விலை இன்று கிராமுக்கு 35 ரூபாய் சரிந்து ரூபாய் 5280.00 என விற்பனையாகிறது.

தங்கம் விலை

தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து 6வது நாளில் சற்று சரிவு

அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 280 சரிந்து ரூபாய் 42240.00 என விற்பனையாகி வருகிறது. மேலும், சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5642.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 45136.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 20 காசுகள் சரிந்து ரூபாய் 71.80 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 71800.00 எனவும் விற்பனையாகி வருகிறது. அமெரிக்காவின் ஜனவரி மாத சில்லறைப் பணவீக்கம் அதிகரித்துள்ளதால், அடுத்துவரும் கூட்டத்தில் பெடரல் ரிசர்வ் வட்டிவீதத்தை உயர்த்தும் என்பது உறுதியாகியுள்ளது. இதனால், அந்நிய முதலீட்டாளர்கள் கடன் பத்திரங்களிலும் முதலீட்டை திருப்பியதால் தங்கத்தின் தேவை குறைந்து வருகிறது.