LOADING...
'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் Google மற்றும் Unity இணைந்து கேம் டெவலப்பர் பயிற்சி வழங்கும் திட்டம் தொடக்கம்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில், இந்தப் பயிற்சி திட்டத்துக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் Google மற்றும் Unity இணைந்து கேம் டெவலப்பர் பயிற்சி வழங்கும் திட்டம் தொடக்கம்

எழுதியவர் Venkatalakshmi V
Jul 29, 2025
05:17 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக இளைஞர்களின் திறன்களை வளர்த்து, அவர்களுக்கு உலகத் தரமான வேலை வாய்ப்புகளை வழங்கும் நோக்கத்தில் தமிழக அரசு, 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் புதிய முன்னெடுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, Google Play மற்றும் Unity நிறுவனங்களுடன் இணைந்து, கேம் டெவலப்பர் பயிற்சி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம், தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் கணினி அறிவியல் (CSE) துறையில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கும், சமீபத்தில் பட்டம் பெற்றவர்களுக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சியை இலவசமாக வழங்குகிறது. இது தொடர்பாக, இன்று தலைமைச் செயலகத்தில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில், Google, Unity மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இடையே இந்தப் பயிற்சி திட்டத்துக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

முக்கிய அம்சங்கள்

திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

இலவச Unity லைசென்ஸ் (தலா ரூ.32,000 மதிப்பில்) உலக தரத்தில் பயிற்சி மற்றும் சான்றிதழ் தேர்வு தயாரிப்பு அமர்வுகள் மற்றும் தொழில் நிபுணர் வழிகாட்டல் ஸ்டார்ட்-அப் ஆர்வமுள்ளவர்களுக்கு இன்க்யூபெட்டர் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் முதல் கட்டமாக 250 மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். இதில், கேம் டிசைன், டெவலப்மென்ட் மற்றும் மானிட்டைசேஷன் போன்ற துறைகளில் பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சியின் மொத்த மதிப்பு ரூ.80,32,500 ஆகும். உலகளவில் $200 பில்லியன் மதிப்பை எட்டியுள்ள நிலையில், இந்த சந்தையை நோக்கி தமிழ்நாட்டு மாணவர்களை முன்னேற்றுவதற்கே இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.