
எட்டு நாட்கள் டு எட்டு மாதங்கள்; சுனிதா வில்லியம்ஸ் 2025 பிப்ரவரியில் பூமிக்கு திரும்புவார் என நாசா அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
போயிங்கின் பழுதடைந்த ஸ்டார்லைனர் கேப்சூலில் ஜூன் மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட இரண்டு நாசா விண்வெளி வீரர்கள் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் ஸ்பேஸ்எக்ஸ் வாகனத்தில் பூமிக்கு திரும்ப வேண்டும் என்று நாசா சனிக்கிழமை (ஆகஸ்ட் 24) அறிவித்துள்ளது.
ஸ்டார்லைனரின் சிக்கல்கள் காரணமாக வீரர்களை அதில் பூமிக்கு அழைத்துவருவது மிகவும் ஆபத்தானது என்று நாசா கருதுகிறது.
இதனால் எட்டுநாள் பணிக்காக சென்றவர்கள் எட்டு மாதங்கள் விண்வெளியில் செலவிட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
போயிங் தனது மிக முக்கியமான தயாரிப்புகளான வணிக விமானங்களின் உற்பத்தியில் தொடர்ந்து சிக்கல்களுடன் போராடி வரும் நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த ஆண்டுதான் நாசாவின் வீரர்களை விண்ணுக்கு தனது விண்கலத்தில் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஸ்டார்லைனர்
சிக்கலை எதிர்கொள்ளும் ஸ்டார்லைனர்
பூமியின் சுற்றுவட்டப் பாதைக்கு விண்வெளி வீரர்களை அனுப்புவதற்கான நாசாவின் இரண்டாவது விருப்பமாக க்ரூ டிராகனுடன் போட்டியிடும் வகையில் வடிவமைக்கப்பட்ட கம்ட்ராப் வடிவ காப்ஸ்யூலான ஸ்டார்லைனரை உருவாக்க போயிங் பல ஆண்டுகளாக போராடியது.
ஸ்டார்லைனர் 2019ஆம் ஆண்டு சோதனையில் தோல்வியுற்றது, ஆனால் 2022 ஆம் ஆண்டு டூ-ஓவர் முயற்சியில் வெற்றி பெற்றது. வழக்கமான விமானங்களுக்கான காப்ஸ்யூலை நாசா சான்றளிப்பதற்கு முன் அதன் முதல் குழுவினருடன் ஜூன் மாதம் விண்ணுக்கு அனுப்பப்பட்டது.
இதன்மூலம், மூத்த நாசா விண்வெளி வீரர்களான புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகிய இருவரும் ஸ்டார்லைனரை ஓட்டிய முதல் பணியாளர் ஆனார்கள்.
இதற்கிடையே, நாசாவின் தற்போதைய முடிவு, விண்வெளித்துறையில் போயிங்கின் போட்டியாளராக உள்ள எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திற்கு ஜாக்பாட்டாக மாறியுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
நாசாவின் எக்ஸ் பதிவு
After extensive review by experts across the agency, NASA's @BoeingSpace Crew Flight Test will return with an uncrewed #Starliner. Astronauts Butch Wilmore and Suni Williams are scheduled to return to Earth next spring aboard #Crew9: https://t.co/bfjenUU1Jf pic.twitter.com/c4NzZVJcvw
— NASA (@NASA) August 24, 2024