Play Station 5-க்கு ரூ.7,500 தள்ளுபடி அறிவித்திருக்கும் சோனி
தங்களுடைய ஃப்ளாக்ஷிப் கேமிங் கண்சோலான பிளே ஸ்டேஷன் 5 (PS 5) மாடலுக்கு, குறிப்பிட்ட கால சலுகையை அளித்து அறிவித்திருக்கிறது சோனி நிறுவனம். PS 5-வானது டிஸ்க் எடிஷன் மற்றும் டிஜிட்டல் எடிஷன் என இரண்டு வேரியன்ட்களாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் டிஸ்க் எடிஷனில் CD-க்களைப் பயன்படுத்தியும் கேம்களை விளையாட முடியும். ஆனால், டிஜிட்டல் எடிஷனில், டிஜிட்டலாக சோனி வெளியிடும் விளையாட்டுக்களை மட்டுமே விளையாட முடியும். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இரண்டு எடிஷன்களின் விலைகளையும் உயர்த்தியது சோனி. தற்போது இந்தியாவில் இந்த PS 5-ன் டிஸ்க் எடிஷனானது, ரூ.54,990 விலையிலும், டிஜிட்டல் எடிஷனானது ரூ.39,990 விலையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
PS 5 டிஸ்க் எடிஷனுக்கு சோனி அளித்திருக்கும் சலுகை:
மேற்கூறிய இரண்டு எடிஷன்களில், டிஸ்க் எடிஷனுக்கு மட்டும் ரூ.7,500 தள்ளுபடி வழங்கியிருக்கிறது சோனி. அதாவது, தற்போது PS 5 டிஸ்க் எடிஷனை ரூ.47,490 விலையிலேயே வாங்க முடியும். ஆனால், இந்தச் சலுகையை ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 2 வரை மட்டுமே அளித்திருக்கிறது சோனி. இந்தச் சலுகை காலத்தில், PS 5 டிஸ்க் வெர்ஷனை சலுகை விலையில், அமேசான், ஃபிளப்கார்ட், ரிலையன்ஸ் மற்றும் க்ரோமா உள்ளிட்ட ஆன்லைன் தளங்களிலும், குறிப்பிட்ட சில்லறை வணிகக் கடைகளிலும் பெற்றுக் கொள்ள முடியும். PS 5 டிஸ்க் எடிஷனுக்கு சலுகை அளித்திருக்கும் நிலையில், டிஜிட்டல் எடிஷனுக்கு எந்த வித சலுகையையும் சோனி அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.