
சாம்சங்கின் புதிய மிட்ரேஞ்சு 'கேலக்ஸி A34'.. எப்படி இருக்கிறது?: ரிவ்யூ
செய்தி முன்னோட்டம்
மிட்ரேஞ்சு செக்மெண்டில் தங்களுடைய புதிய கேலக்ஸி A34 ஸ்மார்ட்போனை வெளியிட்டிருக்கிறது சாம்சங். நத்திங் போன் (1), ரெட்மி நோட் 12 ப்ரோ+ ஆகிய ஸ்மார்ட்போன்களுக்குப் போட்டியாக வெளியாகியிருக்கிறது A34. சாம்சங்கின் இந்த புதிய மொபைல் எப்படி இருக்கிறது? பார்க்கலாம்.
வசதிகள்:
6.6 இன்ச் Super AMOLED டிஸ்பிளே
மீடியாடெக் டைமன்சிட்டி 1080 ப்ராசஸர்
48MP+8MP+5MP ரியர் கேமரா: 13MP செல்ஃபி கேமரா
5000 mAh பேட்டரி
IP67 ரேட்டிங்
இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார்
25W ஃபாஸ்ட் சார்ஜிங்
ஆண்ட்ராய்டு 13
விலை:
8 GB ரேம் + 128 GB ஸ்டோரேஜ் - ரூ.30,999
8 GB ரேம் + 256 GB ஸ்டோரேஜ் - ரூ.32,999
மொபைல் ரிவ்யூ
பயன்பாட்டிற்கு எப்படி இருக்கிறது?
HDR10+ சான்றிதழ் மட்டும் தான் இல்லை, மற்றபடி இந்த A34-ன் டிஸ்பிளே நன்றாகவே இருக்கிறது. வளைவான விளிம்புகளுடன் இதன் டிசைனும் ஓகே. ரெப்ரெஷ் ரேட்டிற்கு ஸ்மார்ட் ஸ்விட்ச் ஆப்ஷன் இல்லை, ஒன்று 60Hz இல்லையெனில் 120Hz.
சில பல செயலிகளை நாம் வாங்கும் போதே இன்ஸ்டால் செய்து கொடுக்கிறது சாம்சங். ஆனால், வேண்டும் என்றால் அதனை அன்இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.
பெர்ஃபாமன்ஸும் இந்த செக்மெண்டுக்கு ஓகேவான பெர்ஃபாமன்ஸ் தான்.
5 வருடங்களுக்கு ஆண்டராய்டு மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படும் என சாம்சங் உறுதியளித்திருப்பது சிறப்பு.
ஓகேவான கேமரா மற்றும் நல்ல பேட்டரி லைஃபைக் கொண்டிருக்கிறது A34. மொத்தத்தில் ஒரு விலைக்கேற்ற சில சிறப்பம்சங்களுடன் கூடிய நல்ல ஸ்மார்ட்போன் A34.