NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / கூகுளுக்கு உலகின் ஒட்டுமொத்த ஜிடிபியை விட அதிக தொகையை அபராதமாக விதித்தது ரஷ்யா நீதிமன்றம்; ஏன் தெரியுமா?
    அடுத்த செய்திக் கட்டுரை
    கூகுளுக்கு உலகின் ஒட்டுமொத்த ஜிடிபியை விட அதிக தொகையை அபராதமாக விதித்தது ரஷ்யா நீதிமன்றம்; ஏன் தெரியுமா?
    கூகுளுக்கு உலகின் ஒட்டுமொத்த ஜிடிபியை விட அதிக தொகையை அபராதமாக விதித்தது ரஷ்யா

    கூகுளுக்கு உலகின் ஒட்டுமொத்த ஜிடிபியை விட அதிக தொகையை அபராதமாக விதித்தது ரஷ்யா நீதிமன்றம்; ஏன் தெரியுமா?

    எழுதியவர் Sekar Chinnappan
    Nov 01, 2024
    10:52 am

    செய்தி முன்னோட்டம்

    ஒரு வியத்தகு சட்ட நடவடிக்கையாக, ரஷ்யா $20 டெசிலியன் அபராதத்தை உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான கூகுளுக்கு விதித்துள்ளது.

    20 டெசிலியன் என்பது 2க்கு அடுத்து 34 பூஜ்ஜியங்களைக் கொண்டுள்ள எண்ணாகும். இது உலகின் ஒட்டுமொத்த ஜிடிபியை விட மிகவும் அதிகமாகும்.

    ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்ததைத் தொடர்ந்து ஆர்டி மற்றும் ஸ்புட்னிக் உள்ளிட்ட ரஷ்ய அரசு ஊடக சேனல்களுக்கு மார்ச் 2022 இல் யூடியூப் தடை விதித்ததற்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக ரஷ்ய நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், இந்த சேனல்களைத் தடுப்பதன் மூலம் கூகுள் ஒளிபரப்புச் சட்டங்களை மீறியதாக ரஷ்ய நீதிமன்றம் தீர்ப்பளித்தது மற்றும் அவற்றை மீண்டும் ஒளிபரப்புவதை கட்டாயமாக்கியது.

    நடவடிக்கை

    தீர்ப்புக்கு இணங்க தவறினால் நடவடிக்கை

    ஒன்பது மாத காலத்திற்குள் யூடியூப் இணங்கத் தவறினால் அபராதம் தினசரி இரட்டிப்பாக்கப்படும் என்று தீர்ப்பு எச்சரிக்கிறது.

    உக்ரைன் மோதல் தொடங்கியதில் இருந்து, வன்முறையை மறுப்பதை அல்லது குறைப்பதைத் தடைசெய்யும் உள்ளடக்கக் கொள்கைகளை மேற்கோள் காட்டி, ஆயிரக்கணக்கான ரஷ்ய அரசின் ஆதரவு சேனல்கள் மற்றும் வீடியோக்களை யூடியூப் அகற்றியுள்ளது.

    பதினேழு ரஷ்ய ஒளிபரப்பாளர்கள் தங்கள் சேனல்களை திரும்ப ஒளிபரப்ப அனுமதிக்க வலியுறுத்தி கூகுளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர்.

    முன்னதாக, Tsargrad மற்றும் RIA FAN போன்ற ரஷ்ய சேனல்களில் இதே போன்ற கட்டுப்பாடுகள் காரணமாக கூகுள் 2020 இல் முன்கூட்டியே அபராதங்களை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கூகுள்
    ரஷ்யா
    யூடியூப்
    தொழில்நுட்பம்

    சமீபத்திய

    தமிழ்நாட்டில் SSLC பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விகிதம் 93.80% தமிழ்நாடு
    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்
    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்

    கூகுள்

    டிக்கெட் ரீஃபண்ட் மோசடியை தவிர்ப்பதற்கான டிப்ஸ்களை IRCTC பகிர்ந்துள்ளது இந்திய ரயில்வே
    Flyover Callout: இப்போது சரியான மேம்பாலத்தை தேர்வு செய்ய உதவும் கூகுள் மேப்ஸ் பயணம்
    கூகுளுக்கு போட்டியாக SearchGPT என்ற சர்ச் எஞ்சினை களமிறக்கியது ChatGPT சாட்ஜிபிடி
    இப்போது உரையாடல் மூலம் க்ரோம் பிரௌசர் ஹிஸ்டரி தேடலாம்; எப்படி தெரியுமா?  தொழில்நுட்பம்

    ரஷ்யா

    மாஸ்கோ பயங்கரவாத தாக்குதல்: குற்றத்தை ஒப்புக்கொண்ட மூன்று தீவிரவாதிகள் ஐ.எஸ்.ஐ.எஸ்
    இஸ்ரேல் பதிலடி கொடுத்தால், இதுவரை பயன்படுத்தாத ஆயுதங்களை பயன்படுத்துவோம்: ஈரான் மிரட்டல் ஈரான்
    உக்ரைன் போரில், உலகளாவிய இரசாயன ஆயுதங்கள் தடையை ரஷ்யா மீறியதா? உக்ரைன்
    நைஜரில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்திற்குள் ரஷ்ய துருப்புக்கள் நுழைந்தன அமெரிக்கா

    யூடியூப்

    அரசுக்கு எதிரான போலி செய்திகளை கண்டறிய உண்மை கண்டறியும் குழு அமைப்பு தமிழ்நாடு
    அமெரிக்காவைத் தொடர்ந்து, பல நாடுகளில் யூடியூப் பிரீமியத்தின் சந்தா விலை உயர்த்தப்படுகிறது  யூடியூப் வியூஸ்
    குறைந்த விலையில் பட்டாசுகள் விற்பதாக கூறி போலி இணையதள மோசடி - பொதுமக்களுக்கு எச்சரிக்கை  தீபாவளி
    தவறான நோக்கத்துடன் தகவல் தேடுபவர்களை கண்டறிய கூகுள், யூடியூப் நிறுவனங்களின் உதவியை நாடிய சைபர் கிரைம் கேரளா

    தொழில்நுட்பம்

    இனி டைப் பண்ணவே தேவையில்லை; ஜிமெயில் பயனர்களுக்கு சூப்பரான அப்டேட்டைக் கொடுத்த கூகுள் கூகுள்
    அக்டோபர் 1 முதல் எஸ்எம்எஸ்களுக்கு கட்டுப்பாடு;  டிராய் அறிவிப்பின் முக்கிய அம்சங்கள் தொழில்நுட்பம்
    உலகின் பல பகுதிகளிலும் ஸ்பாட்டிஃபை சேவைகள் திடீர் முடக்கம்; காரணம் என்ன? தொழில்நுட்பம்
    பார்க்கிங்கில் காரை கண்டறியும் திறன்; ரே-பான் ஸ்மார்ட் கண்ணாடிகளில் சூப்பர் அப்டேட் கொடுத்த மெட்டா நிறுவனம் மெட்டா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025