டொனால்ட் ட்ரம்ப்-ஐ சுட்ட நபரின் மொபைல்-ஐ எப்படி FBI அதிகாரிகள் ஓபன் செய்தனர் தெரியுமா?
சென்ற வாரம் நடைபெற்ற அமெரிக்க அதிபருக்கான தேர்தல் பிரச்சாரத்தில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பை நோக்கி மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். அந்த நபரை உடனே பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டு வீழ்த்தினார். தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என அவரது அடையாளம் அதன் பின்னர் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், துப்பாக்கியால் சுட்ட நபரின் மொபைல் போனை FBI அதிகாரிகள் கைப்பற்றி இருந்தனர். கைப்பற்ற பட்ட ஸ்மார்ட்போன், புதிய வகை ஆண்ட்ராய்டு மொபைலை வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்த மொபைல் என்ன வகை, இதை எப்படி FBI அதிகாரிகள் ஓபன் செய்தனர் என்பது குறித்த தகவலை 9to5mac வெளியிட்டுள்ளது.
குற்றவாளியின் போன்-ஐ க்ராக் செய்த FBI
இந்த வார தொடக்கத்தில், துப்பாக்கிச் சூடு நடத்திய தாமஸ் மேத்யூ க்ரூக்ஸின் லாக் செய்யப்பட்ட மொபைலை அணுகியதாக FBI அறிவித்தது. ப்ளூம்பெர்க்கின் புதிய அறிக்கை இன்று இந்த செயல்முறை மற்றும் க்ரூக்ஸ் பயன்படுத்திய தொலைபேசி பற்றிய கூடுதல் விவரங்களை வெளிப்படுத்தியுள்ளது. க்ரூக்ஸின் மொபைலை திறக்கும் முயற்சி தோல்வியடைந்ததும், அதனை வர்ஜீனியாவின் குவானிட்கோவில் உள்ள எஃப்.பி.ஐ ஆய்வகத்திற்கு அனுப்பினர் அதிகாரிகள். அதன் தொடர்ச்சியாக, செவ்வாயன்று அது வெற்றிகரமாக ஓபன் செய்யப்பட்டதாக FBI உறுதிப்படுத்தியது. மேலும் குற்றவாளி பயன்படுத்தியது சாம்சங்கின் புதிய வரவான ஆண்ட்ராய்டு போன் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டது.
எப்படி பாஸ்வார்டை கிராக் செய்தனர்?
"ஆண்ட்ராய்டின் இயங்குதளத்தை இயக்கும் புதிய சாம்சங் மாடலை" ஷூட்டர் பயன்படுத்தியதாக ப்ளூம்பெர்க் இன்று தெரிவிக்கிறது. ஞாயிற்றுக்கிழமை ஃபோனைத் திறப்பதற்கான FBI இன் ஆரம்ப முயற்சி தோல்வி அடைந்ததற்கான காரணம், செல்பிரைட் மென்பொருளைப் பயன்படுத்தி அந்த ஃபோனின் பாஸ்வோர்ட் பாதுகாக்கப்பட்டிருந்தது தான். உடனே FB அதிகாரிகள், நேரடியாக Celebrite உதவியை நாடினர். உடனே செல்பிரைட் நிறுவனம், FBI க்கு "கூடுதல் தொழில்நுட்ப ஆதரவு மற்றும் இன்னும் உருவாக்கத்தில் உள்ள ஒரு புதிய மென்பொருள்" அணுகலை வழங்கினர். இதனை கொண்டு, FBI ஆனது 40 நிமிடங்களில் தொலைபேசியைத் திறக்க முடிந்தது.