Page Loader
ரியல்மி 10 Pro 5G கோகோ-கோலா எடிஷன் - ஸ்மார்ட்போனின் சிறப்புகள்;
Realme 10 Pro 5G Coca-Cola ஸ்பெஷல் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்

ரியல்மி 10 Pro 5G கோகோ-கோலா எடிஷன் - ஸ்மார்ட்போனின் சிறப்புகள்;

எழுதியவர் Siranjeevi
Feb 10, 2023
04:45 pm

செய்தி முன்னோட்டம்

ரியல்மி ஸ்மார்ட்போன் நிறுவனம் அதன் கோகோ-கோலா ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போனை இந்தியாவில் இன்று (பிப்.10) அறிமுகம் செய்தது. ரியல்மி நிறுவனத்தின் லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன்களில் ஒன்றான ரியல்மி 10 ப்ரோ 5ஜி மார்ட்போனின் ஸ்பெஷல் எடிஷனாகும். இந்த ஸ்மார்ட்போன் கோகோ கோலா ரியல்மி 10 ப்ரோ கோகோ-கோலா ஸ்பெஷல் எடிஷன், சிங்கிள் ஸ்டோரேஜ் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஆப்ஷனின் கீழ் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் விலை ரூ.20,999 ஆகும். மேலும், பிளாக் கலர் வேரியண்ட்டில், கோகோ கோலா லோகோவுடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் வருகிற பிப்ரவரி 14 ஆம் தேதி அறிமுகம் ஆகிறது.

Realme 10 Pro 5G

Realme 10 Pro 5G Coca-Cola ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்

14ஆம் தேதியன்று, மதியம் 12 மணி முதல் பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி நிறுவனத்தின் வலைத்தளம் வழியாக விற்பனைக்கு வரும். இவை, 6.72 இன்ச் அளவிலான ஃபுல்-எச்டி+ (1,080x 2,400 பிக்சல்ஸ்) எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240 ஹெர்ட்ஸ் டச் சம்ப்ளிங் ரேட் ஆகியவற்றை ஆதரிக்கும். ஸ்னாப்டிராகன் 695 5ஜி சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் உடன் கஸ்டமைஸ் செய்யப்பட்ட கோகோ கோலா தீம் டிசனுடன் வரும். இதில், 108-மெகாபிக்சல் சாம்சங் எச்எம் 6 மெயின் கேமரா + 2-மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் சென்சார் உள்ளது. இது 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான சப்போர்ட் உடனான 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது.