உலகில் அதிவேகமான ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்மார்ட் போன் இதுவா? Realme GT Neo 5
240W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்ட Realme ஆனது GT Neo 5 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த ஸ்மார்ட்போன் தான் உலகில் அதிவேகமான சார்ஜிங் கொண்ட போன் ஆகும். இந்த ஸ்மார்ட்போனில் பல்வேறு அம்சங்கள் குறிப்பிடத்தக்க வகையில் இருக்கிறது. 5ஜி சேவைகளும் உள்ளது. அதேப்போல், Realme GT Neo 5 ஸ்மார்ட்போனை இந்தியாவில் ரியல்மி ஜிடி 3 என அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 240W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது. Realme GT Neo 5 ஸ்மார்ட்போன் 240W மற்றும் 150W என்று இரண்டு வேரியண்ட் மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
realme neo gt 5 உலகின் அதிவேக ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் இயங்கும் ஸ்மார்ட்போன்
ஸ்னாப்டிராகன் 8+ Gen1 சிப்செட் உடன் 16GB ரேம், Android 13-அடிப்படையிலான Realme UI 4.0 ஸ்கின் மூலம் இயங்குகிறது. இதில், 144Hz OLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 8+ ஜெனரல் 1 சிப்செட் மற்றும் 50MP முதன்மை கேமரா ஆகியவற்றையும் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ரியல்மி ஜிடி 3 ஆக இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விலை விபரங்கள் Realme GT Neo 5 150W 8GB/256GB ரூ. 30,400 மற்றும் CNY 2,899 (தோராயமாக ரூ. 35,300) ஆகும். 16GB/256GB மற்றும் 16GB/1TB, GT Neo 5 240W மாறுபாட்டின் விலை முறையே சுமார் ரூ. 39,000 மற்றும் தோராயமாக ரூ. 42,600 இருக்கும் என்று கூறப்படுகிறது.