இந்தியாவில் முதன் முறையாக ஆப்பிள் ஸ்டோர் திறப்பு - எப்போது தெரியுமா?
செய்தி முன்னோட்டம்
பிரபல நிறுவனமான ஆப்பிள் தனது தயாரிப்புகளை இந்தியாவில் உற்பத்தி செய்து விற்பனையிலும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
இதனிடையே, இந்தியாவில் ஆப்பிள் ஸ்டோர் இல்லைப் என்பதே வாடிக்கையாளர்களின் குறையாக இருந்து வந்தது.
இதற்காக பல பேச்சுவார்த்தைகள் எழுந்த பின், ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில், மும்பையில் தனது முதல் ஸ்டோரை திறக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த ஸ்டோருக்கு ஆப்பிள் நிறுவனமானது Apple BKC என பெயர் சூட்டப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள பந்த்ரா குர்லா காம்பிளக்ஸில் ஜியோ வோர்ல்ட் டிரைவ் மாலில் அமைந்துள்ளது.
மேலும், மும்பை ஸ்டோரின் பேனரையும் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதனால் ஏப்ரல் மாதத்துக்குள் ஆப்பிள் ஸ்டோர் திறக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
இந்தியாவில் உள்ள மும்பையில் ஆப்பிள் ஸ்டோர் திறக்கப்படுகிறது
Glimpse of first Apple Store in India.
— News Arena India (@NewsArenaIndia) April 5, 2023
It will open this month in BKC, Mumbai. pic.twitter.com/SXWylAD6ZG