ஆப்பிள் பயனர்களுக்கு இந்திய அரசு விடுத்த எச்சரிக்கை!
உலகம் முழுக்க ஆப்பிள் தயாரிப்புகளை மக்கள் அதிகம் விரும்பி வாங்குகின்றனர். ஆப்பிள் ஐபோன் தொடங்கி, கணினி, வாட்ச், ஐபேட் போன்ற மென்பொருள்களுக்கு High security எனப்படும் பாதுகாப்பு சார்ந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனாலேயே வாடிக்கையாளர்களை கவரும் ஆப்பிள் தயாரிப்புகளுக்கு மத்தியில் இந்திய அரசு ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதாவது, ஆப்பிள் தயாரிப்பு மென்பொருள்களில் சில குறைபாடு உள்ளதாகவும், செக்யூரிட்டிகளில் பாதுகாப்பு நிலை ஏற்பட்டுள்ளதாகவும், வாட்ச், ஐமேக், ஆப்பிள் ட்வியில் உடனடியாக சமீபத்திய வெர்ஷனை அப்டேட் செய்துகொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆப்பிள் தயாரிப்புகளுக்கு இந்திய அரசு எச்சரிக்கை - செய்ய வேண்டியது என்ன?
இந்த எச்சரிக்கையை இந்திய அரசின் Indian Computer Emergency Response Team அல்லது CERT-In அறிக்கையில் வெளியிட்டுள்ளது. அதிலும் ஐமேக்கில் உள்ள சஃபாரி வெப் பிரவுசரில் சில பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாகவும் இதனால் ஹேக்கர்கள் எளிதில் நுழைய முடியும் எனவும் எச்சரித்துள்ளது. அப்டேட் செய்யாவிட்டால், மெமரி குறைபாடு, பிரைவசி பாதுகாப்பு பிரச்சினைகள் வரக்கூடும் என CERT-In தெரிவித்துள்ளது. மேலும், ஐபோன் மற்றும் ஐபேட்-இல் இந்த பிரச்சினை இல்லை எனவும், ஐபேட் பயனர்கள் இதுகுறித்து கவலை பட வேண்டாம் என கூறியது. எனவே ஆப்பிள் பயனர்கள் உடனடியாக அப்டேட் செய்து கொண்டால் பிரச்சினையில் இருந்து தப்பிக்கலாம்.