இந்தியாவில் வெளியானது ஓப்போ ரெனோ 10 5G சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்
கடந்த மே மாதம், சீனாவில் தங்களுடைய புதிய ரெனோ 10 5G சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டது ஓப்போ. இரண்டு மாதங்களுக்குப் பிறகு தற்போது இந்தியாவில் அந்த மொபைல்களை அறிமுகம் செய்திருக்கிறது ஓப்போ. ரெனோ 10, 10 ப்ரோ மற்றும் 10 ப்ரோ+ ஆகிய மூன்று ஸ்மார்ட்போன்களை ரெனோ 10 சீரிஸின் கீழ் வெளியிட்டிருக்கிறது ஓப்போ. 120Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட 6.74-இன்ச் AMOLED டிஸ்பிளே, மீடியாடெக் டைமன்சிட்டி 7050 ப்ராசஸர், பின்பக்கம் 64MP ட்ரிபிள் கேமரா, 32MP செல்ஃபி கேமரா, 67W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய 5000mAh பேட்டரி ஆகிய அம்சங்களுடன் வெளியாகியிருக்கிறது அடிப்படை மாடலமான ஓப்போ ரெனோ 10. ரூ.39,999 விலையில் ஜூலை-13 முதல் விற்பனை செய்யப்படவிருக்கிறது ரெனோ 10.
ஓப்போ ரெனோ 10 ப்ரோ மற்றும் ப்ரோ+:
ரெனோ 10 சீரிஸின் மிடில் மாடலான 10 ப்ரோவிலும் 950 நிட்ஸ் அதிகபட்ச பிரைடன்ஸ் கொண்ட 6.74-இன்ச் AMOLED டிஸ்பிளேவைப் பயன்படுத்தியிருக்கிறது ஓப்போ. மேலும், ஸ்னாப்டிராகன் 778G ப்ராசஸக், 50MP ட்ரிபிள் கேமரா, 32MP செல்ஃபி கேமரா, 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய 4,600mAh பேட்டரி ஆகிய அம்சங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ரூ.54,999 விலையில் ஜூலை-13 முதல் விற்பனை செய்யப்படவிருக்கிறது ரெனோ 10 ப்ரோ. இந்த சீரிஸின் டார் மாடலான 10 ப்ரோ+ல் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 ப்ராசஸர், 64MP+50MP ட்ரிபிள் கேமரா மற்றும் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய 4,700mAh பேட்டரியைக் கொடுத்திருக்கிறது ஓப்போ. ஜூலை-20 முதல் விற்பனை செய்யப்படவிருக்கும் இந்த மாடலின் விலையை அந்நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை.