வெளியானது 'ஓப்போ F23 5G' ஸ்மார்ட்போன்.. என்னென்ன வசதிகள்?
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் தங்களுடைய புதிய F23 5G மொபைலை வெளியிட்டிருக்கிறது ஓப்போ நிறுவனம். தற்போது ஓப்போவின் அதிகாரப்பூர்வ தளத்திலும், அமேசான் தளத்திலும் இந்த ஸ்மார்ட்போனுக்கான முன்பதிவு தொடங்கியிருக்கிறது. மே 18 முதல் இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை தொடங்குகிறது.
120Hz ரெப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்ப்ளிங்குடன் கூடிய, 6.92 இன்ச் LCD டிஸ்பிளேவை பெற்றிருக்கிறது இந்த புதிய F23.
பின்பக்கம், 64MP முதன்மை கேமரா, 2MP மோனோ சென்சார் மற்றும் 2MP மைக்ரோ சென்சார் ஆகிவற்றையும், முன்பக்கம் 32MP செல்ஃபி கேமராவையும் பெற்றிருக்கிறது F23.
இந்த மாடலில், 8GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் கொண்ட ஒரோயொரு வேரியன்ட்டை மட்டுமே வெளியிட்டிருக்கிறது ஓப்போ.
ஓப்போ
ப்ராசஸர் மற்றும் பிற வசதிகள்:
குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 5G ப்ராசஸரை புதிய F23-யில் அளித்திருக்கிறது ஓப்போ.
இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
67W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன், 5000 mAh பேட்டரியை இந்த F23-யில் அளித்திருக்கிறது ஓப்போ. இதனை 44 நிமிடங்களில் முழுவதுமாக சார்ஜ் செய்துவிட முடியும் எனத் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம்.
இதன் ஒரோயொரு 8GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் மாடலுக்கு ரூ.24,999 ரூபாய் விலை நிர்ணயம் செய்திருக்கிறது ஓப்போ.
ஐசிஐசிஐ மற்றும் எச்டிஎஃப்சி வங்கிகளின் அட்டைகள் மூலம் பரிவர்த்தனை செய்தால் ரூ.2,500 சலுகையுடன் இந்த ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.