NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / 'GPT' என்ற சுருக்கத்தின் ட்ரேடுமார்க்கிற்கு விண்ணப்பித்திருக்கும் ஓபன்ஏஐ நிறுவனம்! 
    'GPT' என்ற சுருக்கத்தின் ட்ரேடுமார்க்கிற்கு விண்ணப்பித்திருக்கும் ஓபன்ஏஐ நிறுவனம்! 
    தொழில்நுட்பம்

    'GPT' என்ற சுருக்கத்தின் ட்ரேடுமார்க்கிற்கு விண்ணப்பித்திருக்கும் ஓபன்ஏஐ நிறுவனம்! 

    எழுதியவர் Prasanna Venkatesh
    April 26, 2023 | 11:06 am 1 நிமிட வாசிப்பு
    'GPT' என்ற சுருக்கத்தின் ட்ரேடுமார்க்கிற்கு விண்ணப்பித்திருக்கும் ஓபன்ஏஐ நிறுவனம்! 
    ட்ரேடுமார்க்கிற்கு விண்ணப்பித்திருக்கும் ஓபன்ஏஐ

    வெளியாகி சில மாதங்களிலேயே உலகளவில் வைரலானது AI சாட்பாட்டனா சாட்ஜிபிடி. இதன் வெற்றியைத் தொடர்ந்து பல செயற்கை நுண்ணறிவு சாட்பாட் ஜிபிடி என்ற சுருக்கத்தை தங்களது சேவைப் பெயரின் பின்னால் சேர்த்து வருகின்றன. தற்போது, AI சேவை வழங்கும் சாட்பாட்கள் தற்போது டேட்ஜிபிடி, ஸீஜிபிடி, கீதாஜிபிடி என தங்களது பெயர்களில் 'ஜிபிடி'யை சேர்க்கின்றன. இதனைத் தொடர்ந்து, 'GPT' என்ற சுருக்கத்தை ட்ரேடுமார்க் செய்யும் திட்டத்தில் இருக்கிறது ஓபன்ஏஐ. இதனை ட்ரேடுமார்க் செய்வதற்காக கடந்த டிசம்பர் விண்ணப்பித்தருந்தது அந்நிறுவனம். ஜிபிடி என்ற சுருக்கத்தின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து ட்ரேடுமார்க் விண்ணப்ப நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்காக அமெரிக்காவின் காப்புரிமை மற்றும் முத்திரை அலுவலகத்தில் மேலும் ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பித்திருக்கிறது. ஆனால், துரிதப்படுத்துவதற்கான விண்ணப்பம் தற்போது நிராகரிக்கப்பட்டிருக்கிறது.

    ட்ரேடுமார்க் கிடைத்தால் என்ன ஆகும்? 

    Generative Pre-trained Transformer என்பதைச் சுருக்கியே GPT என்று தங்கள் சாட்பாட்டின் பின்னால் சேர்த்திருந்தது ஓபன்ஏஐ நிறுவனம். 2008-ம் ஆண்டிலேயே இதன் முதல் வெர்ஷனை அந்நிறுவனம் வெளியிட்டிருந்தது. ஆனால், சில மாதங்களுக்கு முன்பு வரை அதன் AI மாடல் இவ்வளவு பிரபலமாகவில்லை. இது இவ்வளவு பிரபலமாகும் என ஓபன்ஏஐ நிறுவனமும் எதிர்பார்க்கவில்லை. தற்போது பயனர்களிடம் அதன் AI மாடலுக்குக் கிடைத்த வரவேற்பையடுத்தே துரிதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது அந்நிறுவனம். ஒருவேளை ஜிபிடி சுருக்கத்தின் ட்ரேடுமார்க் ஓபன்ஏஐ நிறுவத்திற்கு வழங்கப்படும் பட்சத்தில், இதன் அனுமதி பெற்ற பிறகே பிற நிறுவனங்கள் அந்த சுருக்கத்தைப் பயன்படுத்த முடியும். அனுமதியின்றி பயன்படுத்தினால் அந்நிறுவனத்தின் மீது ஓபன்ஈஏஐ நிறுவனம் வழக்கு தொடர முடியும்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சாட்ஜிபிடி
    செயற்கை நுண்ணறிவு

    சாட்ஜிபிடி

    'ChatGPT மனிதர்களுக்கு மாற்றா'... இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் பதில்!  செயற்கை நுண்ணறிவு
    பாதுகாப்பு குறைபாடுகள் நிறைந்த AI சாட்பாட்கள்.. சுட்டிக்காட்டிய இஸ்ரேல் நிறுவனம்!  செயற்கை நுண்ணறிவு
    ChatGPT-யை காலி செய்ய வரும் எலான் மஸ்க்கின் TruthGPT!  எலான் மஸ்க்
    "AI-யை நெறிமுறைப்படுத்துவது அவசியம்" - சுந்தர் பிச்சை!  செயற்கை நுண்ணறிவு

    செயற்கை நுண்ணறிவு

    புகைப்படப் போட்டியில் பரிசை வென்ற AI தொழில்நுட்பம்.. சர்ச்சையை எழுப்பிய சம்பவம்!  சோனி
    துபாயில் ரமலான் உணவு பரிமாறும் பிரபலங்கள் - ட்ரெண்டாகும் AI புகைப்படங்கள்  வைரலான ட்வீட்
    மோசடி குறுஞ்செய்திகளை அடையாளம் காண AI தொழில்நுட்பம்.. அறிமுகப்படுத்தியது ட்ரூகாலர் நிறுவனம்!  ஆன்லைன் மோசடி
    AI வசதியுடன் கூடிய புதிய தேடுபொறி.. என்ன செய்கிறது கூகுள்? கூகுள்
    அடுத்த செய்திக் கட்டுரை

    தொழில்நுட்பம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Science Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023