நத்திங் போன் (2).. எப்போது வெளியீடு, என்னென்ன வசதிகள்?
நீண்ட காத்திருப்புக்குப் பிறகு தங்களது இரண்டாவது ஸ்மார்ட்போன் வெளியீடு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது நத்திங் நிறுவனம். ஸ்மார்ட்போன் சந்தையில் புதுவிதமான டிசைன், ஸ்டாக் ஆண்ட்ராய்டு என புதுவிதமான சிந்தனையுடன் களத்தில் நுழைந்தது நத்திங். தற்போது வரை 3 வயர்லெஸ் பட்ஸ்கள் மற்றும் ஒரு ஸ்மார்ட்போன் ஆகியவற்றை அந்நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. அந்நிறுவனத்தின் இரண்டாவது ஸ்மார்ட்போனை வெளியிடவிருப்பதாக கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியான நிலையில், தங்களது ட்விட்டர் பக்கத்தில் அதுகுறித்த பதிவு ஒன்றை அந்நிறுவனம் பதிவிட்டிருக்கிறது. அதன் முதல் ஸ்மார்ட்போனா நத்திங் போன் (1)-ஐ மிட்ரேஞ்சு பிராசஸருடன், மிட்ரேஞ்சு ஸ்மார்ட்போனுக்கான வசதிகளுடனேயே வெளியிட்டிருந்தது. அதன் இரண்டாவது போன் என்படி இருக்கும் என வாடிக்கையாளர்களிடையே எதிர்பார்ப்பு நிலவிவந்த நிலையில், தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
நத்திங் போன் (2):
நத்திங் போன் (1)-ஐ போலவே போன் (2)-விலும் டிரான்ஸ்பரன்ட்டான டிசைனையே அந்நிறுவனம் கொடுத்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. போன் (1) அந்நிறுவனம் மிட்ரேஞ்சு சிப்செட்டை பயன்படுத்தியிருக்க, புதிய போனில் குவால்காமில் கடந்த ஆண்டு ஃப்ளாக்ஷிப் சிப்செட்டான ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1+ சிப்செட்டை ஸ்னாப்டிராகன் பயன்படுத்தும் என தகவல் கசிந்திருக்கிறது. தற்போதைய போனை விட LED இன்டிகேட்டரை கொஞ்சம் பெரிதாக கொடுத்திருக்கிறது நத்திங். இதனை அந்நிறுவனம் ட்விட்டரில் பதிவிட்ட பதிவின் மூலம் நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது. இந்தப் புதிய போன் எப்போது வெளியிடப்படும் எனத் தெளிவாக அந்நிறுவனம் குறிப்பிடவில்லை. கோடையில் வெளியிடப்படும் என்று மட்டும் அதன் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருக்கிறது.