எப்படி இருக்கிறது மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா?: ரிவ்யூ
இந்தியாவில் ஓப்போ மற்றும் சாம்சங்கைக் கடந்து ஃப்ளிப் போன்களை அறிமுகப்படுத்தியிருக்கும் மூன்றாவது நிறுவனமாகிறது மோட்டோரோலா. ரேசர் 40 மற்றும் ரேசர் 40 அல்ட்ரா என இரண்டு ஃப்ளிப் போன்கலை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது மோட்டோரோலா. இதில் ரேசர் 40 அல்ட்ரா எப்படி இருக்கிறது? பார்க்கலாம். வசதிகள்: 6.9 இன்ச் pOLED முதன்மை டிஸ்பிளே 3.6 இன்ச் pOLED வெளிப்புற டிஸ்பிளே குவால்காம் ஸ்னார்டிராகன் 8+ ஜென் 1 ப்ராசஸர் 12MP+13MP ரியர் கேமரா: 32MP செல்ஃபி கேமரா 3,800 mAh பேட்டரி 30W ஃபாஸ்ட் சார்ஜிங்: 5W வயர்லெஸ் சார்ஜிங் வசதி ஆண்ட்ராய்டு 13 விலை: 8 GB ரேம் + 256 GB ஸ்டோரேஜ் - ரூ.89,999
மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா: பயன்பாட்டிற்கு எப்படி இருக்கிறது?
முழுமையான ஸ்மார்ட்போனாக பயன்படுத்தும் போதும் சரி, மடங்கிய நிலையில் பாக்கெட்டுக்குள் வைக்கும் போதும் சரி, ஸ்லிம்மான, ப்ரீமியமான உணர்வைக் கொடுக்கிறது இந்த ரேசர் 40 அல்ட்ரா. குவால்காமின் கடந்தாண்டு ஃப்ளாக்ஷிப் சிப் இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், எதிர்பார்ப்பதைப் போல செயல்திறன் சிறப்பாகவே இருக்கிறது. ஆனால், அதிக கிராஃபிக்ஸ் கொண்ட கேமை சிறிது நேரம் விளையாடினாலே கொஞ்சம் சூடாகிறது இந்த ரேசர் 40 அல்ட்ரா. அதிதீவிரமான பயன்பாட்டிற்கும் கூட ஒரு நாள் வரை தாக்குப்பிடிக்கிறது இதன் பேட்டரி. கேமராவின் செயல்திறனும் குறை சொல்லும் அளவிற்கு இல்லை, நல்ல கேமராவையே கொடுத்திருக்கிறது மோட்டோரோலா. ஒரு சில குறைகளைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால், ஒரு சிறந்த ஃப்ளிப் போனையே வெளியிட்டிருக்கிறது மோட்டோரோலா, சாம்சங்கிற்கும் சிறந்த போட்டியாளர் தான்.