NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / இந்தியாவில் வெளியாகவிருக்கும் மோட்டோரோலாவின் ஃபிளிப் ஸ்மார்ட்போன் சீரிஸ்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவில் வெளியாகவிருக்கும் மோட்டோரோலாவின் ஃபிளிப் ஸ்மார்ட்போன் சீரிஸ்
    இந்தியாவில் வெளியாகும் மோட்டோ RAZR 40 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்

    இந்தியாவில் வெளியாகவிருக்கும் மோட்டோரோலாவின் ஃபிளிப் ஸ்மார்ட்போன் சீரிஸ்

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jun 23, 2023
    10:06 am

    செய்தி முன்னோட்டம்

    இந்த மாதத் தொடக்கத்தில், மோட்டோரோலா RAZR 40 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சீனாவில் வெளியிடப்பட்டன. சீனாவைத் தொடர்ந்து தற்போது இந்தியாவிலும் இந்த ஸ்மார்ட்போன்கள் வெளியாகவிருக்கிறது.

    வரும் ஜூலை 3-ம் தேதி இந்தியாவில் மேற்கூறிய ஸ்மார்ட் ஃபிளிப் போன்களை வெளியிடவிருக்கிறது மோட்டோரோலா. அடுத்த மாதம் தான், சாம்சங்கும் தங்களுடைய புதிய கேலக்ஸி Z ஃபிளிப் 5 ஸ்மார்ட்போனையும் வெளியிடவிருப்பது குறிப்பிடத்தக்கது.

    சாம்சங்கிற்கு அடுத்தபடியாக இந்தியாவில் ஃபிளிப் ஸ்மார்ட்போன்களை வெளியிடவிருப்பது மோட்டோரோலா தான். வரும் ஜூலை 3-ம் தேதி, RAZR 40 மற்றும் RAZR 40 அல்ட்ரா ஆகிய இரண்டு ஃபிளிப் ஸ்மார்ட்போன்களை வெளியிடவிருக்கிறது மோட்டோ.

    ப்யூச்சரிஸ்டிக்கான டிசைன் கொண்ட இந்த போன்களுக்கு ஈடான புதிய ஃபிளிப் போனை வெளியிடுவது தான் சாம்சங்கின் முன் இருக்கும் சவால்.

    மோட்டோரோலா

    மோட்டோரோலா ஃபிளிப் போன் சிறப்பம்சங்கள்: 

    மோட்டோரோலா RAZR 40 அல்ட்ரா ஸ்மார்ட்போனானது, இதுவரை மற்ற போன்கள் கொண்டிராத புதிய சிறப்பம்சங்கள் பலவற்றைக் கொண்டிருக்கிறது.

    165Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட, 6.9 இன்ச் pOLED முதன்மை டிஸ்பிளே மற்றும் 144Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட, ஜ 3.6 இன்ச் pOLED இரண்டாம் டிஸ்பிளே என இரண்டு அதிக ரெப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்பிளேக்களைக் கொண்டிருக்கிறது.

    ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்செட்டுடன், 12GB ரேம் மற்றும் 512GB ஸ்டோரேஜைக் கொண்டிருக்கிறது RAZR 40 அல்ட்ரா.

    33W ஃபாஸ்ட் சார்ஜிங், வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆகிய வசதிகளுடன் கூடிய 3,800mAh பேட்டரியையும் கொண்டிருக்கிறது இந்த மோட்டோரோலாவின் ஃபிளாக்ஷிப் போன். ரூ.80,000 விலையில் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மோட்டோரோலா
    ஸ்மார்ட்போன்

    சமீபத்திய

    காஷ்மீரில் பயங்கரவாதிகளை சுற்றி வளைத்த பாதுகாப்புப் படையினர்; தொடரும் துப்பாக்கிச் சண்டை  ஜம்மு காஷ்மீர்
    மற்றொரு பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலய அதிகாரியை 24 மணி நேரத்தில் வெளியேற உத்தரவிட்ட இந்தியா இந்தியா
    தமிழகம், புதுச்சேரியில் மே 27 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வானிலை ஆய்வு மையம்
    டிரம்ப் தான் காரணமா? இந்தியா-பாகிஸ்தான் போர்நிறுத்த கூற்று குறித்து முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் விமர்சனம் அமெரிக்கா

    மோட்டோரோலா

    இணையத்தில் கசிந்த புதிய மோட்டோரோலா ரேசர் 2023 ஸ்மார்ட்போன்
    எப்படி இருக்கிறது தொடக்க நிலை மோட்டோ E13: ரிவ்யூ!  மொபைல் ரிவ்யூ
    எப்படி இருக்கிறது மோட்டோரோலா எட்ஜ் 40 ஸ்மார்ட்போன்?: ரிவ்யூ ஸ்மார்ட்போன்

    ஸ்மார்ட்போன்

    Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 13-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள் ஃபிரீ ஃபையர்
    மோட்டோ G73 5G.. எப்படி இருக்கிறது?: ரிவ்யூ மொபைல் ரிவ்யூ
    விவோ V27 ப்ரோ.. எப்படி இருக்கிறது?: ரிவ்யூ மொபைல் ரிவ்யூ
    Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 15-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள் ஃபிரீ ஃபையர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025