10 ஆயிரம் ஊழியர்களை நீக்கிய மைக்ரோசாப்ட் - சத்யா நாடெல்லா உருக்கமான கடிதம்!
மைக்ரோசாப்ட் நிறுவனம் மனிதவளம் மற்றும் பொறியியல் பிரிவை சார்ந்த 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. சுமார் 2.20 லட்சம் ஊழியர்கள் பணியாற்றும் நிலையில், 5% ஊழியர்களை நீக்கிவிட்டு நிறுவனத்தை நடத்த திட்டமிட்டுள்ளது. FY23 Q3 இன் இறுதிக்குள் ஒட்டுமொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 10,000 ஆகக் குறைக்கப்பட்டு, அதற்கான மாற்றங்களைச் செய்து வருகிறது. இதுகுறித்து, மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா தெரிவிக்கையில், கணிசமான மாற்றங்கள் ஏற்படக்கூடிய காலத்தில் வாழ்கிறோம் என்று உருக்கமான கடிதத்தை வெளியிட்டுள்ளார். முதலில், தொற்றுநோய் பாதிப்பின் போது வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் மாற்றத்தில் கவனம் செலுத்தினர். நிறுவனத்தின் நீண்ட கால வளர்ச்சிக்கு தொடர்ச்சியான முடிவுகளை, முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய சூழல் இது.
நிறுவனத்தின் நீண்ட கால வளர்ச்சிக்கு முதலீடு செய்யப்படும்
மைக்ரோசாப்ட் இந்த நிலைமையில் இருந்து மீண்டு வரும் என்று நம்புவதாக, பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். முதலில், வருவாய் மற்றும் வாடிக்கையாளர் தேவையைப் பார்க்கும் இடங்களோடு நிறுவனத்தின் செலவுக் கட்டமைப்பு சீரமைக்கப்படும் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபருக்கும் இது ஒரு சவாலான நேரம் என்பதை அறிந்துள்ளதாகவும், மூத்த தலைமைக் குழுவும் தலைவரும், வெளிப்படையாக செயல்படுகின்றனர். நிறுவனத்தின் 47 ஆண்டு காலத்தில் எடுக்கப்பட்ட கடிமையான முடிவு இது தான் என்று வருத்தம் தெரிவித்துள்ளார். நிறுவனம் தனது ஹார்ட்வேர் ஃபோர்ட்ஃபோலியோவையும் மாற்ற இருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பங்களித்த அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்வதாக நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார்.