Page Loader
11 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் மைக்ரோசாப்ட் நிறுவனம்
மைக்ரோசாப்ட் நிறுவனம் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க பணி நீக்கம் செய்து வருகிறது

11 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் மைக்ரோசாப்ட் நிறுவனம்

எழுதியவர் Siranjeevi
Jan 18, 2023
02:15 pm

செய்தி முன்னோட்டம்

மைக்ரோசாப்ட் நிறுவனம சுமார் 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நிதி நெருக்கடி காரணமாக உலகத்தில் உள்ள பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க பணி நீக்கம் செய்து வருகிறது. அந்த வகையில், மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சுமார் 10 ஆயிரம் ஊழியர்களை பணியிலிருந்து நீக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதன்படி, அந்நிறுவனத்தின் மனிதவளப் பிரிவு, பொறியியல் பிரிவு முதலிய பல்வேறு பிரிவுகளின் கீழ் பணியாற்றி வருபவர்கள் நீக்கப்படலாம் எனகூறப்படுகிறது. பிரிட்டனை சேர்ந்த ஸ்கை நியூஸ் தெரிவிக்கையில், ஊழியர்களில் 5 சதவீதம் பேரை வீட்டுக்கு அனுப்பவுள்ளதாகவும் அதன் மூலம் சுமார் 11 ஆயிரம் பேர் வேலை இழக்க நேரிடும் எனக் கூறியுள்ளது.

பணி நீக்கம்

ஊழியர்களை பணி நீக்கம் செய்ய காரணம் என்ன?

இந்த பணிநீக்க நடவடிக்கை குறித்து மைக்ரோசாப்ட் தரப்பில் எந்த கருத்தும் கூறப்படவில்லை. ஏற்கனவே கடந்த ஆண்டு ஜூலை மாதம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் சிறிய எண்ணிக்கையிலான ஊழியர்கள் மட்டும் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்த பணி நீக்கத்திற்கு காரணமாக, தனிநபர் கணினி விற்பனையில் தொடர்ந்து பல காலாண்டுகளாக மைக்ரோசாப்ட் நிறுவனம் சரிவில் உள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், 2022 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி நிலவரப்படி, மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 2.21 லட்சம் முழுநேர ஊழியர்கள் பணிபுரிந்து வந்தனர். அமெரிக்காவில், மட்டும் 1.22 லட்சம் பேர் வேலை பார்க்கிறார்கள். 99 ஆயிரம் பேர் பல்வேறு நாடுகளில் இருந்து பணியாற்றுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.