Page Loader
ChatGPT-யை தடை செய்த இத்தாலி அரசு - காரணம் என்ன?
சாட்ஜிபிடியை தடை செய்த இத்தாலி அரசு

ChatGPT-யை தடை செய்த இத்தாலி அரசு - காரணம் என்ன?

எழுதியவர் Siranjeevi
Apr 01, 2023
04:13 pm

செய்தி முன்னோட்டம்

ChatGPT ஆனது உலகில் மிகவும் பிரபலமாகிவிட்டது. இதனை பயன்படுத்தி பல நிறுவனங்கள் வேலையை எளிதாக்கி வருகின்றனர். ஆனால், இத்தாலி அரசு ChatGPT-ஐ பயன்படுத்த தடை விதிக்கும் வகையில் மொத்தமாக முடக்கியுள்ளது. இதற்கு காரணம் என்ன என இத்தாலி அரசு தெரிவிக்கையில் ChatGPT ஆனது பயனர்களின் தரவுகளை மதிப்பது இல்லை. பயனர்களின் வயதையும் சரிபார்ப்பது கிடையாது என தெரிவித்துள்ளது. இதனால், இத்தாலியில் சாட்ஜிபிடியை பயன்படுத்த முடியாது. மேலும் openAI இத்தாலி சர்வரில் இருந்து வரும் கோரிக்கைகளை ஏற்க முடியாது எனக்கூறப்படுகிறது. தொடர்ந்து openAI, சாட்ஜிபிடியுடன் அமுலுக்கு வரும் வகையில் தடை செய்து விசாரணை நடத்தப்படுவதாக இத்தாலியின் தொழில்நுட்ப கட்டுப்பாட்டாளர் தெரிவித்தார்.

ட்விட்டர் அஞ்சல்

பாதுகாப்பு காரணத்திற்காக சாட்ஜிபிடியை தடை செய்த இத்தாலி அரசு