சென்னை மக்களே..இன்று சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை வெறும் கண்களால் பார்க்கலாமாம்!
சர்வதேச விண்வெளி நிலையம் என்பது அமெரிக்காவின் நாசாவினால் செயல்படுத்தப்படும் ஒரு விண்கலம். ISS என்று அழைக்கப்படும் அந்த விண்வெளி நிலையம், நிலையான வேகம், திசையுடன் பூமியைச் சுற்றி வருகிறது. அங்கே தங்கியிருந்தபடி விண்வெளி வீரர்கள் மாதக்கணக்கில் விண்வெளி பரிசோதனைகள் நடத்தி வருவார்கள். விண்வெளி ஆராய்ச்சியிலும், அங்கே மனிதர்கள் வாழக்கூடிய சாத்தியக்கூறுகளை இந்த ISS ஆராய்ச்சி செய்து வருகிறது. இந்த நிலையில் இந்த சர்வதேச விண்வெளி நிலையத்தை இன்று சென்னையில் இருந்து வெறும் கண்களால் பார்க்க முடியும் என்று நாசா அறிவித்துள்ளது. இன்று இரவு 7.09 மணி அளவில், 7 நிமிடங்களுக்கு சென்னை அமைந்துள்ள சுற்றுவட்ட பாதையின் அருகிலே நெருங்கும் இந்த ISS-ஐ வெறும் கண்களால் பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையம்
சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த விண்வெளி ஆய்வு பூமியை 13 முறை சுற்றி வருகிறது. மணிக்கு 28 ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச விண்வெளி மையம் மிகவும் பிரகாசமாக இருப்பதால் மக்கள் இதை வெறும் கண்களால் பார்க்க முடியும் என்றும் கூறப்படுகிறது. சென்னையில் உள்ள பெரியார் அறிவியல் மையம் போன்ற அறிவியல் சார்ந்த இடங்களில் இந்த நிகழ்வை பார்க்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பூமியில் இருந்து சுமார் 500 கிலோமீட்டர் உயரத்தில் வானில் சுற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தை பார்க்க அனைத்து மக்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
சர்வதேச விண்வெளி நிலையம்
"வெறும் கண்களுக்கு தென்படும் விண்வெளி மையம்" "சென்னையில் இருந்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை இன்று இரவு வெறும் கண்களால் பார்க்கலாம்" இரவு 7.09 மணியில் இருந்து 7 நிமிடங்கள் தென்படும் என நாசா அறிவிப்பு#chennai | #ThanthiTV pic.twitter.com/QlZEKSTTeO— Thanthi TV (@ThanthiTV) May 10, 2024