புதிய 'நியோ 7 ப்ரோ' ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது iQOO
கேமிங்கை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட புதிய நியோ 7 ப்ரோ ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஐகூ(iQOO). 120Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட 6.78-இன்ச் AMOLED டிஸ்பிளேவைக் கொண்டிருக்கிறது புதிய ஐகூ நியோ 7 ப்ரோ ஸ்மார்ட்போன். மிட்ரோஞ்சு செக்மெண்டில் வெளியாகும் பெரும்பாலான் ஸ்மார்ட்போன்களில் வழங்கப்படுவது போலவே, ட்ரிபிள் கேமரா செட்டப்பையே இந்த ஸ்மார்ட்போனிலும் வழங்கியிருக்கிறது ஐகூ. 50MP முதன்மைக் கேமரா, 8MP அல்ட்ரா-வைடு லென்ஸ் மற்றும் 2MP மேக்ரோ கேமரா ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது நியோ 7 ப்ரோ. ஆண்ட்ராய்டு 13-ஐ அடிப்படையாகக் கொண்ட ஃபன் டச் இயங்கதளமே இந்த நியோ 7 ப்ரோவில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
ஐகூ நியோ 7 ப்ரோ: ப்ராசஸர் மற்றும் விலை
ஸ்மார்ட்போன் கேமர்களை தங்கள் வசம் இழுக்க சிறந்த கேமிங் போன்களை தயாரிக்கும் முடிவில் இறங்கியது ஐகூ. இதற்கா திட்டங்களும் பிரத்தியேகமாக தீட்டப்பட்ட நிலையில், அந்தத் திட்டத்தின் கீழ் முதல் ஸ்மார்ட்போனாக வெளியாகியிருக்கிறது இந்த நியோ 7 ப்ரோ. இந்த புதிய நியோ 7 ப்ரோவில், குவால்காம் நிறுவனத்தின் கடந்தாண்டு ஃப்ளாக்ஷிப்பான ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 ப்ராசஸரே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 120W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய 5000mAh பேட்டரியை இந்த நியோ 7 ப்ரோவில் கொடுத்திருக்கிறது ஐகூ. இந்த நியோ 7 ப்ரோவின் 8GB ரேம்+128GB ஸ்டோரேஜ் கொண்ட அடிப்படை வேரியன்டை ரூ.34,999 விலையிலும், 12GB ரேம்+256GB ஸ்டோரேட் கொண்ட டாப் வேரியன்டை ரூ.37,999 விலையிலும் வெளியிட்டிருக்கிறது ஐகூ.