Page Loader
ஐபோன் 12 சாம்சங் கேலக்ஸி எஸ்22 விலை அதிரடி குறைப்பு! பிளிப்கார்ட் அசத்தல் தள்ளுபடி
ஐபோன் 12 மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ் 22 விலையை குறைத்த பிளிப்கார்ட் நிறுவனம்

ஐபோன் 12 சாம்சங் கேலக்ஸி எஸ்22 விலை அதிரடி குறைப்பு! பிளிப்கார்ட் அசத்தல் தள்ளுபடி

எழுதியவர் Siranjeevi
May 01, 2023
06:34 pm

செய்தி முன்னோட்டம்

பிரபல ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட் நிறுவன பிக் சேவிங் டேஸ் விற்பனையை மே 5 ஆம் தேதி தொடங்கி மே 10 ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. இதனிடையே, பிளிப்கார்டில் பல ஸ்மார்ட்போன்களுக்கு எக்ஸ்சேஞ்ச் மற்றும் தள்ளுபடி ஆஃபர்களை வழங்கி வருகிறது. அந்த வகையில், சாம்சங் கேலக்ஸி S22 Plus ஸ்மார்ட்போனுக்கு பெரிய தள்ளுபடியை வழங்கி இருக்கிறது. அதாவது ரூ. 101999 விலையில் தொடங்கும் இந்த போன், தள்ளுபடியுடன் ரூ. 43749 வாங்க முடியுமாம். 31% தள்ளுபடியில் கிடைக்கிறது. மேலும், எக்ஸ்சேஞ்ச் ஸ்மார்ட்போன் நல்ல விலையில் இருந்தால் மேலும் தொகையை குறைக்க முடியுமாம். அதிகபட்சமாக ரூ. 26250 தள்ளுபடியை வழங்குகிறது.

பிளிப்கார்ட் சலுகை

சாம்சங் மற்று ஐபோன் 12 மாடல்களுக்கு சிறப்பு தள்ளுபடி

இதேபோன்று ஆப்பிள் ஐபோன் 12 விலையும் பிளிப்கார்டில் வெறும் ரூ.24749 வாங்கிட முடியுமாம். 64 ஜிபி உடைய ஐபோன் 12 போன் அசல் விலை ரூ. 59900, ஆனால் இ-காமர்ஸ் தளம் ஸ்மார்ட்போனின் விலையை வெறும் ரூ. 53999, இதற்கு 10% தள்ளுபடியும் வழங்கும். எக்ஸ்சேஞ்ச் சலுகை மூலம் அதிகபட்சம் ரூ. 29250 தள்ளுபடியை பெற முடிகிறது. இதனால் ஐபோன் 12 ஸ்மார்ட்போனை வெறும் ரூ. 24749 வாங்க முடியும். மேலும், முக்கியமாக HDFC வங்கி கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு EMI பரிவர்த்தனைகளுக்கு 2000 தள்ளுபடி . மேலும் Flipkart Axis வங்கி கார்டு பரிவர்த்தனைகளுடன் 5% கேஷ்பேக் வழங்குகிறது.