ஸ்பேஸ்எக்ஸின் பால்கன்-9 ராக்கெட்டில் செயற்கைக்கோள்களை ஏவ இருக்கும் இந்தியா
இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் வணிகப் பிரிவு, ஸ்பேஸ்எக்ஸ் ஃபால்கன் 9 ஏவுகணையில் இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் ஜிசாட்-20 என்ற தகவல் தொடர்பு செயற்கைக்கோளை ஏவப்போவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. அமெரிக்காவின் ப்ளோரிடாவிலிருந்து ஏவப்படும் இந்த செயற்கைக்கோள், முதல்முறையாக ஸ்பேஸ்எக்ஸ் ஃபால்கன் 9 இல் ஏவுகணையை பயன்படுத்த உள்ளது. இந்த ஒப்பந்தம் பெரிய தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை தூக்கிச் செல்லும் திறன் கொண்ட ஏவுகணைகள் இஸ்ரோவிடம் இல்லாததை உணர்த்தும் நிலையில், 'சரியான நேரத்தில் வேறு எந்த ஏவுகணையும் கிடைக்கவில்லை' என்பதால், ஸ்பேஸிக்ஸ்-ஐ நாடியதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் தொலைதூரப் பகுதிக்கும் இணையம் வழங்கும் ஜிசாட்-20 செயற்கைக்கோள்
இந்த ஆண்டு இரண்டாம் பாதியில் ஏவப்படும், GSAT-20 செயற்கைக்கோள், அந்தமான் நிக்கோபார், ஜம்மு காஷ்மீர் மற்றும் லட்சத்தீவுகள் உட்பட பான்-இந்தியா கவரேஜ் கொண்ட 32 பீம்களுடன் கூடிய கா-கா பேண்ட் உடன்குடிய (HTS) இணைய சேவையை வழங்குவதற்காக ஏவப்படுகிறது. இந்தியாவின் ஒதுக்குப்புறமான பகுதிகளும் இணைய சேவையை, 4,700 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், கிட்டத்தட்ட 48Gpbs HTS திறனை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பாகுபலி அல்லது ஏவுகணை வாகனம் மார்க் 3 என அழைக்கப்படும் இந்தியாவின் அதிக எடை கொண்ட ராக்கெட், 4,000 கிலோ எடையுள்ள செயற்கைக்கோள்களை மட்டுமே புவி-நிலை சுற்றுப்பாதைக்கு உயர்த்த முடியும்.
பத்து டன் எடையை சுமந்து செல்லும் ஏவுகணையை உருவாக்கும் இந்தியா
இந்தியாவிடம் 4,000 கிலோகளுக்கு மேல் எடை கொண்ட செயற்கைக்கோள்களை ஏவும் ஏவுகணைகள் கிடையாது. இதனால், இந்த வகை எடை அதிகமான செயற்கைக்கோள்களை ஏவுவதற்கு, பிரான்ஸ் தலைமையிலான ஏரியன்ஸ்பேஸ் கூட்டமைப்பை இந்தியா நாடி வந்தது. தற்போது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் இந்தியா ஒப்பந்தம் செய்திருப்பது, குறிப்பிடத்தக்க மாற்றத்தை குறிக்கிறது. அதிகபட்சமாக 10,000 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோள்களை விண்ணுக்கு எடுத்துச் செல்லும் வகையில், புதிய ஏவுகணையை விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்தினர் உருவாக்கி செய்து வருகின்றனர். இது பயன்பாட்டிற்கு வர இன்னும் சில ஆண்டுகள் தேவைப்படும்.