அமெரிக்காவில் அடுத்த வங்கியும் மூடல் - ஜோ பைடன் கொடுத்த உத்தரவாதம்
அமெரிக்காவில் கடந்த நாட்களுக்கு முன் சிலிக்கான் வேலி வங்கி திவாலானதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த வங்கியை தொடர்ந்து, தற்போது அமெரிக்க அரசு மற்றும் வங்கி கட்டுப்பாட்டு ஆணையம் நியூயார்க் Signature Bank-ஐ மூடியுள்ளது. இதனால், கடந்த 48 மணி நேரத்தில் அமெரிக்காவில் இரண்டு வங்கிகள் திவாலாகி மூடப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் எனவும், Signature Bank-ல் டெபாசிட் செய்தவர்கள் அனைவரும் பணம் அளிக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். மேலும், பெரிய வங்கிகளின் மேற்பார்வை மற்றும் ஒழுங்குமுறையை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து மேம்படுத்தப்படும், மீண்டும் இந்த நிலையில் உருவாகாது என நான் உறுதியாக இருக்கிறேன் என்று ஜோ பைடன் கூறினார்.
சிலிக்கான் வேலி வங்கியை அடுத்து Signature வங்கி மூடல் - காரணம் இதுவா?
சிலிக்கான் வேலி பேங்க் சுமார் 210 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு மற்றும் 175 பில்லியன் டாலர் மதிப்பிலான டெபாசிட் உடன் திவாலாகி இருந்தது. எனவே, Signature Bank சுமார் 110.36 பில்லயன் டாலர் சொத்து மதிப்புடனும், 88.59 பில்லியன் டாலர் தொகை டெபாசிட் திவாலாகியுள்ளது. மேலும், Signature Bank பங்குகளின் மதிப்பு சரிவுக்கு கிரிப்டோ எக்ஸ்போஷர் தான் காரணம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்க அமெரிக்க வரலாற்றில் Signature Bank திவால் 3-வது அதிக மதிப்புடைய வங்கியாக இருக்கும் என கூறப்படுகிறது. தற்போது, அமெரிக்க அரசு உத்தரவாதம் கொடுக்காமல் இருந்தால் குறைந்தது 100000 பேர் பணிநீக்கம் செய்யப்படலாம். பல வென்சர் கேப்பிடல் பண்ட் நிறுவனங்கள் மூடப்படவும் அதிக வாய்ப்பு உள்ளது.