பிரபல ஹாலிவுட் நடிகை ஸ்கார்லெட் ஜோஹன்சனும் ஓபன்ஏஐ சர்ச்சையும்: என்ன நடந்தது?
புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகரான ஸ்கார்லெட் ஜோஹன்சன், ஓபன்ஏஐ அவரின் ChatGPT வாய்ஸ் அஸ்சிஸ்டண்டிற்கு (SKY) அவரது குரலைப் போன்ற ஒரு குரலைப் பயன்படுத்தியதாக பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இந்த திட்டத்திற்கு குரல் கொடுக்க அவர் வெளிப்படையாக மறுத்த போதிலும், தனது குரலை போலவே செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட குரலை பயன்படுத்தியதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். கடந்த செப்டம்பரில் OpenAI CEO சாம் ஆல்ட்மேன் தனது புதிய GPT-4o அமைப்பின் பின்னணியில் குரல் கொடுப்பதற்காக தன்னை அணுகியதாக ஜோஹன்சன் வெளிப்படுத்தினார். எனினும், தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் அதை நிராகரித்தார் எனவும் கூறியுள்ளார்.
ChatGPT இன் ஸ்கை குரல் ஸ்கார்லெட் ஜோஹன்சனைப் போலவே ஒலிக்கிறது
மே 19 அன்று, OpenAI ChatGPTக்கு ஐந்து புதிய குரல் திறன்களை அறிமுகப்படுத்தியது: ப்ரீஸ், கோவ், எம்பர், ஜூனிபர் மற்றும் ஸ்கை. நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்தக் குரல்கள்,"நாங்கள் இணைந்து உருவாக்கிய குரல் நடிகர்களிடமிருந்து மாதிரி எடுக்கப்பட்டது." இருப்பினும், ஸ்கை குறிப்பாக ஜோஹன்சனின் குரலை ஒத்திருந்தது. ஓபன்ஏஐ தனது குரலை ஒத்த குரலைக் கொண்ட புதுப்பிக்கப்பட்ட AI மாடலைக் காட்சிப்படுத்தியபோது ஜோஹன்சன் ஆச்சரியப்பட்டார். இது பற்றி அவர், "என்னுடைய நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் 'ஸ்கை' என்ற புதிய அமைப்பு என்னைப் போலவே எவ்வளவு ஒலித்தது என்று குறிப்பிட்டனர்." ஜோஹன்சன் சட்ட ஆலோசகரை நியமித்து, ஓபன்ஏஐக்கு இரண்டு கடிதங்களை அனுப்பியுள்ளார். அதில், அவர்கள் ஸ்கையின் குரலை எவ்வாறு உருவாக்கினார்கள் என்பதற்கான விளக்கத்தைக் கோரியுள்ளார்.