LOADING...
குழந்தைகளுக்கான ஆபாச உள்ளடக்கங்களை தடுக்கும் 'AI' பாதுகாப்பு ஸ்மார்ட்போன் HMD Fuse
உலகின் முதல் AI-ஆதரவு கொண்ட தொலைபேசியாக வர்ணிக்கப்படுகிறது HMD Fuse

குழந்தைகளுக்கான ஆபாச உள்ளடக்கங்களை தடுக்கும் 'AI' பாதுகாப்பு ஸ்மார்ட்போன் HMD Fuse

எழுதியவர் Venkatalakshmi V
Aug 20, 2025
03:55 pm

செய்தி முன்னோட்டம்

பிரபல ஃபின்னிஷ் தொலைபேசி நிறுவனமான HMD (Human Mobile Devices), குழந்தைகளுக்காக முழுமையாக பாதுகாப்பு மையமாக உருவாக்கிய புதிய ஸ்மார்ட்போனான HMD Fuse-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இது, அனைத்து நிர்வாண மற்றும் ஒழுக்கக்கேடான உள்ளடக்கங்களை தடுக்கக்கூடிய உலகின் முதல் AI-ஆதரவு கொண்ட தொலைபேசியாக வர்ணிக்கப்படுகிறது. இந்த சாதனம் SafeToNet எனும் பிரிட்டிஷ் சைபர் பாதுகாப்பு நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட HarmBlock AI என்ற தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. இது ஃபியூஸின் திரை மற்றும் கேமரா மீது நேரடி கட்டுப்பாடுகளை விதித்து, குழந்தைகள் எந்தவொரு நிர்வாண உள்ளடக்கத்தையும் பார்க்கவும், பதிவுசெய்யவும், பகிரவும் முடியாத வகையில் செயல்படுகிறது.

முக்கிய அம்சங்கள்

Fuse ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்

Fuse, குழந்தைகள் நிர்வாண புகைப்படங்களை படம் பிடிப்பது, அனுப்புவது அல்லது இணையத்தில் பார்ப்பதை தடுக்கிறது - நேரடி ஒளிபரப்புகளிலும் கூட இந்த பாதுகாப்பு அமைப்பு செயல்படும். இதில், பயன்பாட்டுக்கான நேர வரம்புகள், திரை நேர கண்காணிப்பு, இடம்தரவு கண்காணிப்பு ஆகியவற்றை பெற்றோர் நிர்வகிக்க முடியும். ஆரம்ப கட்டத்தில் Fuse, அனைத்து சமூக ஊடகங்களையும் இயல்பாகவே தடுக்கிறது. குழந்தையின் வளர்ச்சியைப் பொருத்து கட்டுப்பாடுகள் மெதுவாக தளர்த்தப்படலாம்.

விவரங்கள்

தொழில்நுட்ப விவரங்கள்

இந்த மொபைல் 6.56-இன்ச் HD+ LCD டிஸ்ப்ளே கொண்டுள்ளது. அதோடு, 90Hz புதுப்பிப்பு வீதம், 600nits பிரகாசத்துடன் Snapdragon 4 Gen 2 செயலி மற்றும் 5G ஆதரவுடன் செயல்படுகிறது. தற்போது இந்த மொபைல் ஒரே நிறத்தில்- கருப்பு நிறத்தில் மட்டுமே கிடைக்கும். இது EMI மூலமாகவும் பெறலாம்- மாதத்திற்கு £33 (₹3,878 சுமார்). எனினும், இந்த AI ஸ்மார்ட்போன் தற்போது UK-வில் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளது. இந்திய வெளியீடு குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை.