Page Loader
கூகுள் பிளேஸ்டோரில் இந்த மொபைல் ஆப்ஸையெல்லாம் டவுன்லோட் பண்ணாதீங்க; மத்திய அரசு எச்சரிக்கை
போலி மொபைல் ஆப்ஸ் குறித்து மத்திய அரசு எச்சரிக்கை

கூகுள் பிளேஸ்டோரில் இந்த மொபைல் ஆப்ஸையெல்லாம் டவுன்லோட் பண்ணாதீங்க; மத்திய அரசு எச்சரிக்கை

எழுதியவர் Sekar Chinnappan
Jun 15, 2025
11:05 am

செய்தி முன்னோட்டம்

இந்திய அரசாங்கம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு ஒரு புதிய சைபர் பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. கூகுள் பிளே ஸ்டோரில் அதிகரித்து வரும் நிதி சார்ந்த போலி மொபைல் ஆப்ஸ் குறித்து எச்சரித்துள்ளது. இந்த ஆப்கள், முறையானதாகத் தோன்றினாலும், பயனர்களின் தனிப்பட்ட மற்றும் நிதித் தகவல்களைத் திருட வடிவமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் (I4C) சைபர் தோஸ்த் அதிகாரப்பூர்வ சமூக ஊடக பக்கங்களில் இந்த எச்சரிக்கையை வெளியிட்டது. இந்த ஏமாற்றும் ஆப்களில் பலவற்றில் சட்டவிரோதமான வெளிநாட்டு நிறுவனங்களின் தொடர்பு உள்ளதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆப்கள் பயனர்களின் தனியுரிமை, நிதி பாதுகாப்பு மற்றும் தரவு பாதுகாப்பை அச்சுறுத்துவதாக சைபர் தோஸ்த் தெரிவித்துள்ளது.

மொபைல் ஆப்ஸ்

மொபைல் ஆப்ஸ்களின் பட்டியல்

தீங்கு விளைவிப்பதாகக் குறிக்கப்பட்ட ஆப்களின் பட்டியலில் Invoicer Experts, Loan Raina - Instant Loan Online, Gupta Credit - Safe and Handy, GranetSwift, LoanQ | Financial Calculator, CreditEdge, Ultimate Lend, SmartRich Pro, CreditLens, Cash Loan - EMI Calculator ஆகியவை இடம் பெற்றுள்ளன. எனவே இந்த ஆப்கள் கூகுள் பிளேஸ்டோரில் இருந்தாலும் அவற்றை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. இதற்கிடையே, தொலைபேசி அழைப்புகளின் போது இன்டர்நெட்டை இயக்கத்தில் வைத்திருப்பது சில ஆப்களை ஒட்டுக்கேட்க அனுமதிக்கக்கூடும் என்று மற்றொரு எச்சரிக்கையையும் வெளியிட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

சைபர் தோஸ்தின் எக்ஸ் தள பதிவு