NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / கூகுளில் 12 ஆயிரம் பேர் பணி நீக்கம்! ஊழியர்களுக்கு சுந்தர் பிச்சை உருக்கம்;
    அடுத்த செய்திக் கட்டுரை
    கூகுளில் 12 ஆயிரம் பேர் பணி நீக்கம்! ஊழியர்களுக்கு சுந்தர் பிச்சை உருக்கம்;
    12, 000 கூகுள் நிறுவன ஊழியர்கள் பணி நீக்கம்

    கூகுளில் 12 ஆயிரம் பேர் பணி நீக்கம்! ஊழியர்களுக்கு சுந்தர் பிச்சை உருக்கம்;

    எழுதியவர் Siranjeevi
    Jan 21, 2023
    04:33 pm

    செய்தி முன்னோட்டம்

    கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் 12,000 ஊழியர்கள், அதாவது 6 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

    உலகப் பொருளாதாரம் மற்றும் பணவீக்கத்தின் வீழ்ச்சிக்கு பிரபலமான பல நிறுவனங்கள் ஆட்குறைப்புகளை செய்து வரும் நிலையில், தற்போது கூகுளும் 12 ஆயிரம் பேரை ஆட்குறைப்பு செய்ய உள்ளது.

    இதுகுறித்து கூகுள் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை வெளியிட்ட அறிக்கையில், இந்த கடினமான செய்தியை உங்களுடன் நான் பகிர்ந்து கொள்வதில் வருத்தம் அடைகிறேன் என்று கூறியுள்ளார்.

    "நிறுவனத்தில், தோராயமாக 12 ஆயிரம் பணியாளர்களை குறைக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். இதனால், கடினமாக உழைத்து, பணியமர்த்த விரும்பி, நம்பமுடியாத திறமை வாய்ந்த சிலரிடம் இருந்து விடை பெறுகிறோம். மிகவும் வருந்துகிறேன்" எனக் கூறியுள்ளார்.

    கூகுள் ஆல்பபெட்

    12 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்யும் கூகுள் நிறுவன ஊழியர்களுக்கு சுந்தர் பிச்சை உருக்கம்

    இவை பணியாளர்களின் வாழ்க்கையில் இது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதற்கான, முழுப் பொறுப்பையும் அவரே ஏற்பதாகக் கூறினார்.

    "கடந்த 2 ஆண்டுகளில் வியத்தகு முன்னேற்றத்தை கண்டோம். ஆனால் இந்த வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் வகையில் பணியமர்த்தம் மேற்கொள்ளப்பட்டன.

    இன்று நாம் வேறுபட்ட பொருளாதார யதார்த்தத்தை எதிர் கொண்டு வருகிறோம். இருந்தாலும், நம்முடைய வலுவான கட்டமைப்பு, தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் மதிப்பு, செயற்கை நுண்ணறிவு துறையில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட முதலீடுகள் ஆகியவற்றின் காரணமாக நமக்கு முன்னால் இருக்கும் மிகப்பெரிய வாய்ப்பைப் பற்றி நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன்" என சுந்தர் பிச்சை தெரிவித்தார்.

    மேலும், ஏறக்குறைய 25 ஆண்டைக் கடந்த கூகுள் நிறுவனம், தற்போது கடினமான பொருளாதார சுழற்சிகளை கடக்க வேண்டியுள்ளது என்று கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கூகுள்
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்
    ஆண்ட்ராய்டு

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    கூகுள்

    கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு பெரும் சம்பள உயர்வு! அவர் இப்போது எவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? தொழில்நுட்பம்
    கூகிளில் தேடக்கூடாத விஷயங்கள்; மீறினால், சட்ட சிக்கலில் சிக்குவீர்கள் பயனர் பாதுகாப்பு
    இந்தியாவில் ஆண்ட்ராய்டு வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படும் - Google கவலை ஆண்ட்ராய்டு
    Google Meetக்கான புதிய அப்டேட்: 360 டிகிரியுடன் சிறப்பான அம்சம் தொழில்நுட்பம்

    தொழில்நுட்பம்

    ஜனவரி 13 கான இலவச Fire MAX குறியீடுகள்; இலவசமாக பெறுவதற்கான வழிமுறைகள் ஆண்ட்ராய்டு
    iQoo 11: இந்தியாவின் முதல் Snapdragon 8 Gen 2 ஸ்மார்ட்போன்! வெளியீடு ஆண்ட்ராய்டு
    இந்தியாவில் கேம் பிரியர்களுக்காக Fire boltt ninja 601 இயர்பட்ஸ் அறிமுகம்! புதுப்பிப்பு
    டிவிஎஸ் XLஐ பின்னுக்குத் தள்ள வரும் எம்7 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

    தொழில்நுட்பம்

    அமேசான் குடியரசு தின விற்பனை! iphone 13, OnePlus 10 ஃபோன்களுக்கு அதிரடி சலுகைகள் தொழில்நுட்பம்
    ஜனவரி 16க்கான Fire MAX இலவச குறியீடுகள் - பெறுவதற்கான வழிமுறைகள்; தொழில்நுட்பம்
    உலகம் முழுவதும் 283 மில்லியன் பழைய ஸ்மார்ட்ஃபோன்கள் அனுப்பபட்டுள்ளது! அதிர்ச்சி அறிக்கை; ஆண்ட்ராய்டு
    1000 ஊழியர்கள் பணிநீக்கம்: கண்ணீர் சிந்திய அமேசான் ஊழியர்கள்! தொழில்நுட்பம்

    ஆண்ட்ராய்டு

    வாட்சப் கம்யூனிட்டி மற்றும் வாட்சப் குரூப் புதுப்பிப்பு
    ஆண்ட்ராய்டு 13 - இப்போது பிளைட் மோடில் கூட வைஃபையை இயக்கலாம் ஆண்ட்ராய்டு 13
    ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான ஆப்பிள் டிவி: விரைவில் எதிர்பார்க்கலாம் ஆப்பிள்
    இந்தியாவில் 37.16 லட்சம் கணக்குகளை, வாட்ஸ்அப் தடை செய்துள்ளது வாட்ஸ்அப்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025