NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / பிக்சல் 8 சீரிஸிற்கு 5 ஆண்டுகள் ஆண்ட்ராய்டு அப்டேட் வழங்கவிருக்கும் கூகுள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிக்சல் 8 சீரிஸிற்கு 5 ஆண்டுகள் ஆண்ட்ராய்டு அப்டேட் வழங்கவிருக்கும் கூகுள்
    பிக்சல் 8 சீரிஸிற்கு 5 ஆண்டுகள் ஆண்ட்ராய்டு அப்டேட் வழங்கவிருக்கும் கூகுள்

    பிக்சல் 8 சீரிஸிற்கு 5 ஆண்டுகள் ஆண்ட்ராய்டு அப்டேட் வழங்கவிருக்கும் கூகுள்

    எழுதியவர் Prasanna Venkatesh
    Aug 29, 2023
    04:34 pm

    செய்தி முன்னோட்டம்

    பிக்சல் 7 சீரிஸைத் தொடர்ந்து, வரும் அக்டோபர் மாதம் தங்களுடைய புதிய பிக்சல் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வெளியிடத் தயாராகி வருகிறது கூகுள். இந்த புதிய ஸ்மார்ட்போன் சீரிஸிற்கு ஆப்பிளைப் போலவே, ஐந்து ஆண்டு இயங்குதள அப்டேட் கொடுக்கத் திட்டமிட்டு வருகிறது அந்நிறுவனம்.

    உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஆப்பிள், தங்களுடைய ஐபோன்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரை இயங்குதள அப்டேட் கொடுத்து வருகிறது. இதனால் 2018ம் ஆண்டு வெளியான ஐபோன் XR-ம் அடுத்து வெளியாகும் ஐஓஎஸ் 17 இயங்குதளத்தைப் பெறவிருக்கின்றன.

    மற்றொரு முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான சாம்சங்கோ, தங்களுடைய ப்ரீமியம் சாதனங்கள் அனைத்திற்கும் நான்கு ஆண்டுகள் வரை இயங்குதள அப்டேட்டை வழங்கி வருகிறது.

    கூகுள்

    கூகுளின் புதிய திட்டம்: 

    நீண்ட காலம் ஒரே ஸ்மார்ட்போனை பயன்படுத்த விரும்பும் வாடிக்கையாளர்கள், கூகுளின் இந்தத் திட்டத்தினால் பிக்சல் ஸ்மார்ட்போன்களை வாங்குவதைப் பரிசீலிக்கக்கூடும்.

    ஐந்த வருட இயங்குதள அப்டேட் என்பது பயனாளர்கள் மத்தியில் கணிசமான அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கிறது கூகுள்.

    பிக்சல் 8 சீரிஸின் கீழ், பிக்சல் 8 மற்றும் பிக்சல் 8 ப்ரோ ஆகிய இரண்டு மொபைல்களை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம்.

    கூகுள் நிறுவனமே தயாரிக்கும் டென்சார் G3 சிப் மற்றும் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்துடன் புதிய பிக்சல் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் வெளியாகவிருக்கின்றன.

    கூகுளின் ஐந்து வருட இயங்குதள அப்டேட் என்பது பிற ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களையும், இதே போன்று கூடுதல் காலத்திற்கு இயங்குதள அப்டேட்டை வழங்குவதற்கு வழிவகை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கூகுள்
    ஸ்மார்ட்போன்

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    கூகுள்

    கூகுளின் பிக்சல் டேப்லட்டை விட சிறப்பான வசதிகளைக் கொண்டிருக்கிறது ஒன்பிளஸ் பேடு, ஏன்? கேட்ஜட்ஸ்
    என்னென்ன மாற்றங்களைச் சந்திக்கவிருக்கிறது கூகுள் தேடுபொறி? செயற்கை நுண்ணறிவு
    AI தொழில்நுட்பங்களுக்கான புதிய சட்டம்.. என்ன செய்கிறது அமெரிக்கா? அமெரிக்கா
    பயன்பாட்டில் இல்லாத கணக்குகள் நீக்கம்.. கூகுளின் புதிய அறிவிப்பு! ட்விட்டர்

    ஸ்மார்ட்போன்

    எப்படி இருக்கிறது 'ஓப்போ ஃபைண்டு N2 ஃப்ளிப்'?: ரிவ்யூ மொபைல் ரிவ்யூ
    டெக்னோவின் 'பேண்டம் V ஃபோல்டு' ஸ்மார்ட்போன், எப்படி இருக்கிறது?: ரிவ்யூ மொபைல் ரிவ்யூ
    இந்தியாவில் புதிய ரேஸர் 40 சீரிஸ் ஃப்ளிப் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டது மோட்டோரோலா மோட்டோரோலா
    புதிய 'நியோ 7 ப்ரோ' ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது iQOO கேட்ஜட்ஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025