Loading...
Google Gemini புதிய தனியுரிமைக் கொள்கை: தற்காலிக சாட்கள் 2 மாதங்கள் வரை சேமிக்கப்படும்
உலகம் முழுவதும் உள்ள ஜெமினி செயலியில் இந்த மாற்றம் நடைமுறைக்கு வரவுள்ளது

Google Gemini புதிய தனியுரிமைக் கொள்கை: தற்காலிக சாட்கள் 2 மாதங்கள் வரை சேமிக்கப்படும்

எழுதியவர் Venkatalakshmi V
Nov 18, 2026
07:01 pm

செய்தி முன்னோட்டம்

செயற்கை நுண்ணறிவு (AI) தளமான கூகுள் ஜெமினியில், தற்காலிக உரையாடல்கள் மற்றும் சாட் ஹிஸ்டரி ஆஃப் செய்யப்பட்ட உரையாடல்களை சேமித்து வைக்கும் கால அளவை கூகுள் நிறுவனம் அதிகரித்துள்ளது. இதுவரை 72 மணி நேரம் (3 நாட்கள்) மட்டுமே சேமிக்கப்பட்டு வந்த இந்த உரையாடல்கள், புதிய கொள்கையின்படி இனி சுமார் 2 மாதங்கள் வரை சேமிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் வாரங்களில் உலகம் முழுவதும் உள்ள ஜெமினி செயலியில் இந்த மாற்றம் நடைமுறைக்கு வரவுள்ளது.

புதிய கொள்கை

ChatGPT மற்றும் Claude உடன் ஒப்பிடுகையில் கூகுளின் புதிய கொள்கை

பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பக் காரணங்களை முன்னிட்டு கூகுள் கொண்டுவந்துள்ள இந்த மாற்றம், மற்ற முன்னணி AI நிறுவனங்களின் விதிகளை விட மிக நீண்ட கால அளவைக் கொண்டுள்ளது.

கூகுள் ஜெமினி: சுமார் 2 மாதங்கள்

ஓபன் ஏஐ சாட்ஜிபிடி: அதிகபட்சம் 30 நாட்கள்

ஆந்த்ரோபிக் கிளாட்: இயல்பாக 30 நாட்கள்

காரணம்

சேமிப்பு காலத்தை கூகுள் அதிகரித்தது ஏன்?

இந்த கொள்கை மாற்றத்திற்கான துல்லியமான பின்னணியை கூகுள் விரிவாக விளக்கவில்லை என்றாலும், கீழ்க்கண்ட காரணங்களுக்காகவே உரையாடல்கள் நீண்ட காலம் சேமிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

பயனர்களுக்கு துல்லியமாக பதிலளிப்பதற்கும், பயனர்களின் கருத்துக்களை செயல்படுத்துவதற்கும், கூகுளின் சேவைகள் மற்றும் பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், மேலும், மேம்படுத்தப்பட்ட ஜெமினி ஆப்ஸ் தனியுரிமை மையத்தில், சாத்தியமான சிஸ்டம் கோளாறுகளை கையாள்வதும் இதற்கு ஒரு காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

புதிய கட்டுப்பாடுகள்

பயனர்களுக்கு கிடைத்துள்ள 2 புதிய தனித்தனி கட்டுப்பாடுகள்

சேமிப்பு காலத்தை அதிகரித்துள்ள அதே வேளையில், பயனர்களின் தனியுரிமை கட்டுப்பாட்டை மேம்படுத்தும் வகையில் 'சாட் ஹிஸ்டரி' மற்றும் 'AI பயிற்சி' ஆகிய இரண்டிற்கும் தனித்தனி செட்டிங்ஸ்களை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதற்கு முன்பு இவை இரண்டும் 'கீப் ஆக்டிவிட்டி' என்ற ஒரே அமைப்பின் கீழ் இருந்தன. ஆனால் இனி, பயனர்கள் தங்களது உரையாடல்களை கூகுளின் ஜெனரேட்டிவ் AI மாடல்களுக்கு பயிற்சி அளிக்க பயன்படுத்தாமலேயே, தங்களது சாட் ஹிஸ்டரியில் சேமித்து வைத்துக்கொள்ள முடியும்.

ஏற்கனவே 'கீப் ஆக்டிவிட்டி' வசதியை Disable-லில் வைத்திருந்த பயனர்களுக்கு, இந்த இரண்டு புதிய செட்டிங்ஸ்களும் இயல்பாகவே ஆஃப் நிலையிலேயே இருக்கும் என கூகுள் உறுதிப்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT