Loading...
ஃபிரீ ஃபையர் இந்தியா மீதான தடை நீக்கம்: இன்று முதல் இந்தியாவில் மீண்டும் அறிமுகம்
இன்று புதிய இந்திய வெர்ஷனுடன் அதிகாரப்பூர்வமாக மீண்டும் களம் இறங்குகிறது Free Fire India

ஃபிரீ ஃபையர் இந்தியா மீதான தடை நீக்கம்: இன்று முதல் இந்தியாவில் மீண்டும் அறிமுகம்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 28, 2026
03:29 pm

செய்தி முன்னோட்டம்

பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக இந்தியாவில் தடை செய்யப்பட்டிருந்த பிரபல ஆன்லைன் கேமிங் செயலியான ஃபிரீ ஃபையர், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று புதிய இந்திய வெர்ஷனுடன் அதிகாரப்பூர்வமாக மீண்டும் களம் இறங்குகிறது. கரீனா நிறுவனம் இந்திய வீரர்களின் தேவைகள் மற்றும் கலாச்சாரத்தை கருத்தில் கொண்டு 'Free Fire India' என்ற பெயரில் பிரத்யேகமாக இந்த கேமை வடிவமைத்துள்ளது. வழக்கமான விறுவிறுப்பான பேட்டில் ராயல் கேமிங் அனுபவத்தோடு, இந்தியாவின் பன்முகக் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் உள்ளூர் நிகழ்வுகளும் இதில் இடம்பெற்றுள்ளன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 15-ஆம் தேதி வரை நடைபெறும் சிறப்பு கேம்பெயின்கள் மற்றும் பிரத்யேகப் பரிசுகளும் கேமில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

பாதுகாப்பு நடவடிக்கை

'Play It Right': புதிய பாதுகாப்பு நடவடிக்கைகள்

விளையாட்டுப் பழக்கத்திற்கு அடிமையாவதைத் தடுக்கவும், தரவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளைக் கரீனா நிறுவனம் கொண்டுவந்துள்ளது.

18 வயதுக்குட்பட்ட பிளேயர்களுக்கு பெற்றோர் அல்லது காப்பாளர்களின் ஒப்புதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட இடைவெளிகளில் ஓய்வெடுக்க நினைவூட்டல்கள் மற்றும் தினசரி விளையாடும் நேர வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

கேமிற்குள் பொருட்கள் வாங்கச் செலவிடும் தொகைக்கு உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பயனர்களின் தரவுகள் பாதுகாப்பாக இருக்க உள்நாட்டுச் சேவையகங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இன்று முதல் 'Free Fire India' கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்யக் கிடைக்கும்.

பட்ஜெட் போன்கள் முதல் ஐஃபோன் வரை அனைத்து வகை ஸ்மார்ட்போன்களிலும் சுலபமாக இயங்கும் வகையில் இந்த கேம் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT