Loading...
2027-ல் ஏஐ துறைக்கு 'மிகக் கடுமையான பணத் தட்டுப்பாடு' ஏற்படும்: எலான் மஸ்க் எச்சரிக்கை
2027-ல் ஏஐ துறைக்கு கடுமையான பணத் தட்டுப்பாடு ஏற்படும் என எலான் மஸ்க் எச்சரிக்கை

2027-ல் ஏஐ துறைக்கு 'மிகக் கடுமையான பணத் தட்டுப்பாடு' ஏற்படும்: எலான் மஸ்க் எச்சரிக்கை

எழுதியவர் Sekar Chinnappan
Nov 22, 2026
07:09 pm

செய்தி முன்னோட்டம்

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தரவு மையங்களின் விரிவாக்கத்திற்கு நிதியளிப்பதில் 2027 ஆம் ஆண்டில் கடுமையான பணத் தட்டுப்பாடு ஏற்படும் என எலான் மஸ்க் எச்சரித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 22) தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் எக்ஸ்ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான மஸ்க் இக்கருத்தைத் தெரிவித்துள்ளார். அதிக அளவிலான கணினித் திறனை இயக்குவதும் குளிர்விப்பதும் நம்பகத்தன்மையுடன் செயல்பட வைப்பதும் மிகவும் கடினமான செயல் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏஐ பங்குகள்

ஏஐ பங்குகள் குறித்த பிரான்சுவா சோலெட்டின் பதிவும் எலான் மஸ்க்கின் பதிலடியும்

ஏஐ பங்குகள் குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவற்றை வாங்க இதுவே சரியான தருணம் என்றும் ஏஐ ஆய்வாளர் பிரான்சுவா சோலெட் பதிவிட்டிருந்தார்.

ஜிபியு விலைகள் உயர்ந்து எச்பிஎம் மற்றும் டிஆர்ஏஎம் நினைவகங்கள் 2029 வரை விற்றுத் தீர்ந்துவிட்டாலும் ஏஐ இன்ஃபெரன்ஸ் 70 முதல் 85 சதவீத லாப வரம்புடன் வளர்வதாக அவர் கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்த எலான் மஸ்க் தரவு மையங்களுக்கு பணம் செலுத்துவதற்கும் அவை வருவாய் ஈட்டுவதற்கும் இடையே உள்ள கால இடைவெளியை சுட்டிக்காட்டியுள்ளார்.

மூலதனம்

சில மாத தாமதத்தால் தேவைப்படும் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர் நடைமுறை மூலதனம்

தரவு மையங்களுக்கான சிப்கள், மின்சாரம் மற்றும் கட்டுமான பணிகளுக்கு நிறுவனங்கள் முன்கூட்டியே பெருந்தொகையை செலவிட வேண்டியுள்ளது.

பணம் செலுத்திய பிறகு அவை நம்பகத்தன்மையுடன் செயல்பட்டு வருவாய் ஈட்டத் தொடங்கத் தொழில்துறை முழுவதும் சில மாதங்கள் தாமதம் ஏற்பட்டாலே பெரும் நிதி நெருக்கடி உருவாகும்.

இத்தகைய தாமதங்களால் நடைமுறை மூலதனத்திற்கு மட்டும் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்கள் கூடுதலாக தேவைப்படும் என்றும் அந்த பணம் எங்கிருந்து வரும் என்றும் மஸ்க் கேள்வி எழுப்பியுள்ளார்.

ADVERTISEMENT