டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளார்
இந்திய சந்தையில் டெஸ்லாவின் நுழைவு குறித்து விவாதிக்க எலான் மஸ்க் இந்த மாத இறுதியில் பிரதமர் மோடியை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு, தனது இந்தியா பயணத்தை உறுதிப்படுத்தியுள்ளார். மஸ்க், பிரதமர் மோடியை சந்திப்பதன் நோக்கம், இந்தியாவில் முதலீடு செய்வதற்கும், டெஸ்லாவுக்கான புதிய தொழிற்சாலையை நிறுவுவதற்கும் மஸ்க்கின் நோக்கங்களைப் பற்றி விவாதிப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்திய செய்திப்படி, டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் அதன் உற்பத்தி பிரிவை விரைவில் தொடங்கவுள்ளது. இது சார்ந்த அறிவிப்பும் மஸ்க் தனது இந்திய பயணத்தின்போது வெளியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா டுடே வெளியிட்டுள்ள செய்தியின்படி, பிரதமர் மோடியுடனான மஸ்க்கின் சந்திப்பு ஏப்ரல் 22-ம் தேதி புதுதில்லியில் நடைபெற உள்ளது.
இந்தியா வருகிறார் எலான் மஸ்க்
Looking forward to meeting with Prime Minister @NarendraModi in India!— Elon Musk (@elonmusk) April 10, 2024