வங்கி முதல் டேட்டிங் பயன்பாடு வரை: X -இன் செயல்பாட்டை மாற்ற திட்டமிட்ட மஸ்க்
தி வெர்ஜ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தற்போது எக்ஸ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள ட்விட்டர்-ஐ எலான் மஸ்க் வங்கியாக மாற்றியமைக்க திட்டமிட்டிருந்தார். எக்ஸ் செயலியின் மூலம் பண பரிமாற்றம் உள்ளிட்ட பலதரப்பட்ட மாற்றங்களை புகுத்த அவர் திட்டமிட்டிருந்ததாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. வங்கியைத் தவிர, எக்ஸ் ஒரு டேட்டிங் சேவையாகவும், ஆட்சேர்ப்புக்கான லிங்க்ட்இனுக்கு மாற்றாகவும் மற்றும் யூடியூப் மாற்றாக உருமாற்ற எலான் மஸ்க் திட்டங்களை வைத்திருந்ததாக அறிக்கை கூறுகிறது.
வங்கியாக மாற்ற திட்டம்
எலான் மஸ்க் 2022 இல் ட்விட்டர் சமூக ஊடக தளத்தை வாங்கியபோது, அதை ஒரு வங்கியாக மாற்றவே அவர் திட்டமிட்டிருந்தாராம். அந்த திட்டம் அவரது இரண்டு-இலக்குகளின் ஒரு பகுதியாகும். அதாவது, ட்விட்டரை ஒரு "டிஜிட்டல் டவுன் சதுக்கமாக" மாற்றுவதற்கான ஒரு குறிக்கோளும் அதை உருவாக்குவதற்கான இலக்கும் அடங்கும். இரண்டாவது ட்விட்டர் தளத்தை "அனைத்திற்குமான பயன்பாடு" என மாற்றுவது எனவும் திட்டமிட்டிருந்தாராம். இந்த இரண்டும் இன்னும் நடக்கவில்லை என்று அந்த அறிக்கை தற்போது தெரிவிக்கிறது. 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஒருவரின் முழு நிதி வாழ்க்கையையும் X கையாள முடிந்தால் அது தன் மனதைக் கவரும் என்று மஸ்க் கடந்த ஆண்டு நடந்த நிறுவனத்தின் மீட்டிங்கில் கூறியிருந்ததாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
ஏற்கனவே வங்கி செயல்பாட்டில் மஸ்க்கின் அனுபவம்
X -ஐ வங்கியாக மாற்ற, கலிபோர்னியாவை உள்ளடக்கிய 38 அமெரிக்க மாநிலங்களில் பணம் செலுத்துவதற்கான பணப் பரிமாற்றி உரிமங்களைப் பெற்று, வென்மோ போன்ற கட்டண வசதியை X இன்னும் உருவாக்கி வருகிறது. இருப்பினும், நியூயார்க் போன்ற பிற முக்கிய மாநிலங்களில் இன்னும் ஒப்புதல் வரவில்லை. 1999 இல் எட் ஹோ, ஹாரிஸ் ஃப்ரிக்கர் மற்றும் கிறிஸ்டோபர் பெய்ன் ஆகியோருடன் இணைந்து மஸ்க் இணைந்து நிறுவிய அசல் X.com (இப்போது PayPal என அழைக்கப்படுகிறது, ஆன்லைன் கட்டண சேவை) இந்த யோசனை பல வழிகளில் பிரதிபலிக்கிறது. இதற்காக 2022ல் மஸ்க் வாங்கிய அதே டொமைனையே ட்விட்டர் இப்போது பயன்படுத்துகிறது.