பூமியில் இருக்கும் நீரில் ஆக்ஸிஜன் அளவு அபாயகரமான வேகத்தில் குறைவதாக தகவல்
செய்தி முன்னோட்டம்
உலகெங்கிலும் உள்ள நீர்நிலைகளில் ஆக்ஸிஜனின் விநியோகம் வேகமாக குறைந்து வருகிறது என்றும், இது பூமியின் உயிர் ஆதரவு அமைப்புக்கு மிகப்பெரிய ஆபத்துகளில் ஒன்றாகும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
காற்றில் இருக்கும் ஆக்ஸிஜன் எப்படி மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இன்றியமையாததாக இருக்கிறதோ அதே போல் நீரில் இருக்கும் ஆக்ஸிஜன் நீர் வாழ் உயிரினங்களுக்கு மிக முக்கியமானதாக உள்ளது.
காலநிலை மாற்றம், கடல் அமிலமயமாக்கல், அடுக்கு மண்டல ஓசோன் சிதைவு, உலகளாவிய பாஸ்பரஸ் மற்றும் நைட்ரஜன் சுழற்சிகளில் குறுக்கீடு, பல்லுயிர் இழப்பு விகிதம், உலகளாவிய நன்னீர் பயன்பாடு, நில அமைப்பு மாற்றம், ஏரோசல் ஏற்றுதல் மற்றும் இரசாயன மாசுபாடு ஆகியவை ஏற்கனவே பூமியை பெருமளவு அழிக்கக்கூடிய விஷங்கள் என்ற பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
உலகம்
எதனால் நீர்நிலைகளில் ஆக்ஸிஜன் குறைகிறது?
இந்நிலையில், நீர்நிலைகளில் ஆக்ஸிஜன் குறைந்து வருவதையும் அந்த பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று ஒரு விஞ்ஞான குழு முன்மொழிந்துள்ளது.
அமெரிக்காவின் ரென்சீலர் பாலிடெக்னிக் நிறுவனத்தைச் சேர்ந்த நன்னீர் சூழலியல் நிபுணர் கெவின் ரோஸ் தலைமையிலான குழு இதை முன்மொழிந்துள்ளது.
பூமியை மிகப் பெருமளவில் அழிக்கக்கூடிய ஒரு விஷயத்தை அந்த பட்டியலில் சேர்க்காமல் இருப்பது கவலை அளிப்பதாக அந்த குழு கூறியுள்ளது.
அந்த பட்டியலில் உள்ள பிற விஷயங்களுடன் ஒப்பிடும் போது, இது அதே அளவு வேகமாக அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் கவலை எழுப்பியுள்ளனர்.
சாதாரண நீருடன் ஒப்பிடும் போது சூடான நீரினால் அதிக ஆக்ஸிஜனை தக்க வைத்து கொள்ள முடியாது.
எனவே, உலக வெப்பமயமாதல் தான் இந்த மாற்றத்திற்கு பெரும் காரணியாக உள்ளது.