Loading...
கருப்பை புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் புதிய ரத்தப் பரிசோதனை: விஞ்ஞானிகள் மாபெரும் சாதனை
கருப்பை புற்றுநோயை ரத்தப் பரிசோதனை மூலமாக கண்டறிய முடியும்

கருப்பை புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் புதிய ரத்தப் பரிசோதனை: விஞ்ஞானிகள் மாபெரும் சாதனை

எழுதியவர் Venkatalakshmi V
Nov 12, 2026
02:45 pm

செய்தி முன்னோட்டம்

பெண்களுக்கு ஏற்படும் கருப்பை புற்றுநோயை மிகவும் ஆரம்ப நிலையிலேயே, அதாவது நோய் தீவிரமடைவதற்கு முன்பே ரத்தப் பரிசோதனை மூலமாக கண்டறிய முடியும் என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஹோக் குடும்ப புற்றுநோய் நிறுவனத்தைச் சேர்ந்த ராஜன் கோக்னா தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட இந்த ஆய்வு, புகழ்பெற்ற நேச்சர் மெடிசின் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. பொதுவாக கடைசி கட்டத்தில்தான் கண்டறியப்படும் இந்தக் கொடிய நோய்க்கு, இக்கண்டுபிடிப்பு ஒரு மாபெரும் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.

புதிய அணுகுமுறை

ஆரம்பகட்ட மூலக்கூறு மாற்றங்களை கண்டறியும் புதிய அணுகுமுறை

இதுவரை நடத்தப்பட்ட ஆய்வுகள் சிறிய கட்டிகளை கண்டறிவதிலேயே கவனம் செலுத்தி வந்த நிலையில், இந்த ஆய்வாளர்கள் புற்றுநோய் பரவுவதற்கு முன்பே ஏற்படும் ஆரம்பகட்ட மூலக்கூறு எச்சரிக்கை அறிகுறிகளை கண்டறியும் புதிய அணுகுமுறையை கையாண்டனர்.

கருப்பை புற்றுநோய் பொதுவாக கருக்குழாயின் உட்புறச் சுவரில் ஏற்படும் நுண்ணிய மாற்றங்களுடன் தொடங்குகிறது.

இது மருத்துவ மொழியில் STIC (Serous Tubal Intraepithelial Carcinoma) என அழைக்கப்படுகிறது.

இந்த STIC பாதிப்பு உள்ள பெண்களின் ரத்தத்தில் Tu-Stroma எனப்படும் ஒரு குறிப்பிட்ட RNA மூலக்கூறின் அளவு அதிகமாக இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

கண்டறியும் திறன்

92.3% துல்லியமாக கண்டறியும் திறன்

ரத்த மாதிரிகளில் உள்ள இந்த 'Tu-Stroma' மூலக்கூறை அளவிடுவதன் மூலம் வியக்கத்தக்க முடிவுகள் கிடைத்துள்ளன.

STIC பாதிப்பு உள்ள பெண்களில் 92.3% பேருக்கு நோயை மிக துல்லியமாகக் கண்டறிய முடிந்தது. *

நோய் பாதிப்பு இல்லாத பெண்களை 98.2% துல்லியமாக சரியாக அடையாளம் காண முடிந்தது.

பரம்பரையாகப் புற்றுநோய் அபாயம் கொண்ட பெண்களுக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில், பாசிட்டிவ் முடிவுகள் சுமார் 72% துல்லியமாகவும், நெகட்டிவ் முடிவுகள் கிட்டத்தட்ட100% துல்லியமாகவும் இருந்தன.

ஆரம்ப நிலையிலேயே நோய் கண்டறியப்படுவதால், உரிய நேரத்தில் சிகிச்சை அளித்துப் பல பெண்களின் உயிரைக் காப்பாற்ற இந்தப் புதிய ரத்தப் பரிசோதனை முறை பேருதவியாக இருக்கும் என மருத்துவ உலகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT