
நிலவின் மாதிரிகளுடன் வெற்றிகரமாக பூமிக்கு தரையிறங்கிய சீனாவின் Chang'e-6
செய்தி முன்னோட்டம்
சீனாவின் Chang'e-6 விண்கலம் சுமார் இரண்டு மாத கால விண்வெளி பயணத்திற்கு பிறகு இன்று வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியுள்ளது.
நிலவின் தொலைதூரப் பகுதியில் இருந்து சுமார் 2 கிலோ மாதிரிகளை சேகரித்துக்கொண்டு, சீனாவின் மங்கோலியா பகுதியில் தரையிறங்கியது Chang'e-6.
2007 இல் தொடங்கிய சீனாவின் வெற்றிகரமான நிலவின் ஆய்வுத் தொடரைத் தொடர்ந்து, நிலவின் தொலைதூரப் பகுதியிலிருந்து பூமிக்குத் திரும்பிய முதல் மாதிரிகள் இவைதான்.
அறிவியல் எதிர்பார்ப்புகள்
Chang'e-6 பணியானது நிலவின் அடிப்படைக் கேள்விகளுக்குப் பதிலளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது
நிலவின் தொலைதூரப் பக்கம், பெரும்பாலும் 'இருண்ட பக்கம்' என்று தவறாகக் குறிப்பிடப்படுகிறது எனினும் இது ஏராளமான சூரிய ஒளியைப் பெறுகிறது.
ஆனால் பூமியிலிருந்து இப்பகுதியினை பார்க்க முடியாது.
இருப்பினும், இது தனித்துவமான பண்புகளைக் கொண்டுள்ளது.
நாம் கவனிக்கும் நிலவின் பக்கத்துடன் ஒப்பிடும்போது இது குறைவான சமவெளிகளையும், அதிக பள்ளங்களையும், தடிமனான மேலோடுகளையும் கொண்டுள்ளது.
சீன அறிவியல் அகாடமியின் புவியியலாளர் Zongyu Yue, Chang'e-6 இன் மாதிரிகள் சந்திரனின் இரு பக்கங்களுக்கு இடையிலான வேறுபாடுகளுக்கு காரணமான புவியியல் செயல்பாட்டை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறினார்.
பணி காலவரிசை
Chang'e-6 இன் பயணம்: ஏவுதல் முதல் திரும்பும் வரை
Chang'e-6 விண்கலம் மே 3 அன்று ஹைனானில் இருந்து ஏவப்பட்டது.
தொடர்ந்து ஜூன் 1 அன்று நிலவின் மிகப் பழமையான மற்றும் ஆழமான பள்ளமான தென் துருவ-ஐட்கன் படுகையில் விளிம்பில் தரையிறங்கியது.
ஒரு ஸ்கூப் மற்றும் ட்ரில் அடங்கிய இயந்திரத்தை பயன்படுத்தி, அது இரண்டு நாட்கள் நிலவின் பாறை மற்றும் தூசியை அதன் சுற்றுப்புறங்களிலிருந்தும் மேற்பரப்பிற்கு அடியிலும் சேகரித்தது.
அதனைத்தொடர்ந்து மாதிரிகள் நிலவின் மேற்பரப்பில் இருந்து ஏவப்பட்டு ஜூன் 6 அன்று ஆர்பிட்டருடன் இணைக்கப்பட்டன.
ஜூன் 21 அன்று ஆர்பிட்டர் பூமிக்கு திரும்பும் பயணத்தைத் தொடங்கியது.
லட்சியங்கள்
Chang'e-6: சீனாவின் விண்வெளித் திட்டத்தில் ஒரு மைல்கல்
ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் கீழ் சீனாவின் விண்வெளித் திட்டத்திற்கு Chang'e-6 பணி ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும்.
சந்திரனின் தொலைதூரத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டதை சீன அரசு செய்தி நிறுவனமான சின்ஹுவா,"மனித சந்திர ஆய்வு வரலாற்றில் முன்னோடியில்லாத சாதனை" என விவரித்தது.
சாத்தியமான இராணுவ நோக்கங்கள் குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்தாலும், சீனாவின் லட்சிய விண்வெளித் திட்டங்களில் 2030ஆம் ஆண்டுக்குள் சந்திரனுக்கு ஒரு குழுவை அனுப்புவது மற்றும் சந்திர தளத்தை உருவாக்குவது ஆகியவை அடங்கும்.