6 மாதங்களில் 40 AI மாடல்களுக்கு அங்கீகாரம்: ChatGPTக்கு போட்டியாக சீனாவின் நடவடிக்கை
செய்தி முன்னோட்டம்
கடந்த ஆறு மாதங்களில்,40 செயற்கை நுண்ணறிவு (AI) மாடல்களை, பொது பயன்பாட்டிற்காக சீனா அரசு அங்கீகரித்துள்ளது.
Xiaomi Corp, 4Paradigm மற்றும் 01.AI ஆகியவை சமீபத்திய அனுமதிகளைப் பெற்ற நிறுவனங்களில் அடங்கும்.
கடந்த ஆண்டு ஆகஸ்டில், தொழில்நுட்ப நிறுவனங்கள், பெரிய மொழி மாதிரிகளை (LLMs) பொதுமக்களுக்குக் கிடைக்கச் செய்வதற்கு முன், ஒழுங்குமுறை அனுமதியைப் பெற வேண்டும் என்று சீன அரசு உத்தரவிட்டதன் பிறகு நடைபெற்ற வளர்ச்சியாகும்.
முன்னதாக உலகப்புகழ் பெற்ற ChatGPT இன் எழுச்சியே, சீனாவின் AI வளர்ச்சியில் எழுச்சியைத் தூண்டியது என்பது மறுப்பதற்கில்லை.
ChatGPT இன் எழுச்சி, சீனாவின் AI வளர்ச்சியில் எழுச்சியைத் தூண்டியது.
செயற்கை நுண்ணறிவு
AI மாடல்களை தயாரிப்பதில் போட்டியிடும் பெரிய நிறுவனங்கள்
இதன்மூலம், உலகளாவிய LLM களில், அமெரிக்காவிற்கு அடுத்த இடத்தில் சீனா உள்ளது.
தற்போது வரை, சீனா 130 எல்எல்எம்களை கொண்டுள்ளது.
இது உலகளாவிய LLM களில் 40% ஆகும்.
எனினும், அமெரிக்கா 50% எல்எல்எம்களை கொண்டுள்ளது என்று தரகு நிறுவனமான CLSA தெரிவித்துள்ளது.
Baidu's Ernie Bot, ChatGPT போன்ற சாட்பாட், ஏற்கனவே 100 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களை ஈர்த்துள்ளது என்று நிறுவனத்தின் CTO டிசம்பரில் தெரிவித்தது.
செயற்கை நுண்ணறிவிற்கு அமெரிக்கா பல தடைகள் விதித்த போதிலும், பெய்ஜிங் AI இல் தீவிரமாக முதலீடு செய்கிறது.