அதிகம் பேரால் பார்க்கப்பட்ட யூடியூப் நேரலை சாதனையை முறியடித்த சந்திரயான் 3
நேற்று மாலை நிலவின் தென் துருவப் பகுதியில் முதல் முறையாக சந்திரயான் 3 விண்கலத்தை தரையிறக்கி வரலாற்றுச் சாதனை படைத்தது இந்தியா. இந்த நிகழ்வினை, தங்களது சமூக வலைத்தளப் பக்கங்கள் அனைத்திலும் நேரலை செய்தது இஸ்ரோ. இந்நிலையில், யூடியூப் நேரலையில் ஒரே நேரத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட நிகழ்வு என்ற சாதனையையும் படைத்திருக்கிறது சந்திரயான் 3. நேற்று மாலை சந்திரயான் தரையிறங்கும் யூடியூப் நேரலையை 80 லட்சம் பேர் ஒரே நேரத்தில் பார்த்திருக்கிறார்கள். இதற்கு முன்னர் பிரேசில் மற்றும் தென் கொரியா இடையிலான கால்பந்து போட்டியை 61 லட்சம் பேர் நேரலையில் பார்த்ததே, அதிகம் பேரால் பார்க்கப்பட்ட யூடியூப் நேரலை சாதனையாக இருந்து வந்தது. தற்போது அந்த சாதனையையும் முறியடித்திருக்கிறது சந்திரயான் 3.