17 ஆயிரம் மோசடி வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கிய மத்திய அரசு
ஆன்லைன் மோசடி குற்றங்களில் ஈடுபட்ட கிட்டதட்ட 17 ஆயிரம் வாட்ஸ்அப் கணக்குகளை மத்திய அரசு முடக்கியுள்ளது. இந்த கணக்குகள் பல்வேறு நாடுகளிலிருந்து செயல்பட்டதும், அவை இந்தியாவில் சைபர் குற்றங்களைச் செய்ய பயன்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் தொடர்ச்சியாக டிஜிட்டல் மோசடிகளை தடுப்பதற்காக உள்துறை அமைச்சகம் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், கம்போடியா, மியான்மர், லாவோஸ் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளிலிருந்து இந்த வாட்ஸ் அப் கணக்குகள் சைபர் குற்றங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் தளங்களில் பாதிக்கப்பட்டவர்கள் வழங்கிய புகார்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த கணக்குகள் பல்வேறு நிதி மோசடிகளில் பயன்படுத்தப்பட்டு வந்தன என கண்டறியப்பட்டுள்ளது.
Twitter Post
மோசடி கணக்குகளை முடக்க வாட்ஸப்பிற்கு முறையீடு
சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம், மோசடி கணக்குகளை அடையாளம் கண்டு, அவற்றை தடுக்கும் வகையில் வாட்ஸ்அப்பிற்கு அறிவுறுத்தியுள்ளது. அதிகரித்து வரும் டிஜிட்டல் மோசடிகளைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை, சைபர் பிரிவின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்டது. இந்த வாட்ஸாப் மோசடிகள், சட்ட அதிகாரிகளை போல ஆள்மாறாட்டம் செய்து 'டிஜிட்டல் கைது' போன்ற வதந்திகளை பரப்பி, பாதிக்கப்பட்டவர்களுக்கு மிரட்டல் அளித்து பணத்தை பறிகொள்வது உட்பட பல நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
ஆண்டுதோறும் அதிகரிக்கும் டிஜிட்டல் மோசடி வழக்கு
சைபர் பிரிவின் ஆதாரங்கள் படி, இந்த மோசடி நடவடிக்கைகள் தினசரி 6 கோடி ரூபாயை திருடுகின்றன. 2024ம் ஆண்டின் முதல் 10 மாதங்களில், இவை ரூ.2,140 கோடியை எட்டியுள்ளது. அக்டோபர் மாதம் மட்டும், டிஜிட்டல் கைது மோசடிகளுடன் தொடர்புடைய 92,334 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு, இத்தகைய மோசடிகளை கண்டறிந்து, அதிக நிதி பாதிப்பைத் தவிர்க்க எச்சரிக்கை விடுத்துள்ளது.