ஒரே ஒரு பொருளை 100 கோடிக்கு விற்று புதிய சாதனை படைத்த பிரிட்டானியா!
இந்தியாவின் பிஸ்கட் முன்னணி நிறுவனமான பிரிட்டானியா ஒரு பொருளை மட்டும் 100 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து சாதனைப் படைத்துள்ளது. பிஸ்கட் நிறுவனமான பிரிட்டானியாவின் இச்சாதனை ஒரு பொருளை அறிமுகம் செய்து ஒரு வருடம் முடிவதற்குள்ளேயே 100 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்வது என்பது சற்று கடினமான விஷயம் தான். இதனை சூப்பராக செய்துள்ளது பிரிட்டானியா, அப்படி இந்நிறுவனம் 100 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பொருள் என்ன தெரியுமா? புதிதாக அறிமுகம் செய்த Treat Croissant-ன் விற்பனை 100 ரூபாய் அளவீட்டை ஒரு வருடத்திற்குள்ளேயே எட்டியுள்ளதாக பெருமையுடன் கூறியுள்ளது. Treat Croissant creme roll-ஐ பிரிட்டானியா நிறுவனம் தனது சொந்த தொழிற்சாலையில் சொந்தமாக தயாரித்து விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.
பிரிட்டானியா பிஸ்கட் படைத்த புதிய சாதனை - அப்படி என்ன ஸ்பெஷல்?
இந்த பிஸ்கட் இந்தியர்களுக்கு பிடிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக இயக்குனர் மற்றும் நிர்வாக துணை தலைவர் வருண் பெர்ரி தெரிவிக்கையில், தனது நிறுவனம் ஸ்னாக்ஸ் வர்த்தகத்தில் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் Treat Croissant அறிமுகமும் அதன் வெற்றியும் மிகவும் முக்கியமானது. இதன்மூலம் நிர்வாகம் இந்திய மக்களுக்கு உலக தரம் வாய்ந்த அனுபவத்தை மலிவான விலையில் கொடுத்துள்ளோம் என பிரிட்டானியா தெரிவித்துள்ளது. மேலும், 3 வருடத்தில் 300 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுவது தான் இலக்கு என பிரிட்டானியா தெரிவித்துள்ளது.