
அருணாச்சல பிரதேசத்தில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது
செய்தி முன்னோட்டம்
இந்திய ராணுவத்திற்கு சொந்தமான சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
அருணாச்சல பிரதேசத்தில் திராங் மலைப்பகுதியில் உள்ள மண்டாலா மலைப்பகுதியில் கடும் பனி மூட்டம் நிலவியுள்ளது.
இந்த பனிமூட்டத்தால் தான் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளது என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கிறது.
இதனை தொடர்ந்து, ஹெலிகாப்டரில் பயணம் செய்த விமானிகளை தேடும் பணியில் ராணுவ மீட்பு படையினர் ஈடுபட்டு வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
மேலும் இன்று(மார்ச்.,16) காலை 9.15 மணியளவில் ஹெலிகாப்டருடனான இணைப்பு மற்றும் தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
அருணாச்சல பிரதேசத்தில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது
அருணாச்சலப் பிரதேசத்தில் சீட்டா ராணுவ ஹெலிகாப்டர் விபத்து#HelicopterCrash #IndianArmy #Cheetah #AsianetNewsTamilhttps://t.co/hNLJrqaFA9
— Asianetnews Tamil (@AsianetNewsTM) March 16, 2023